Wife and Smart Class at Digital Village in 39 villages in Ramanathapura District: Minister Manikantan

ராமநாதபுரம் மாவட்டத்தில் 39 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு அங்கு பள்ளிகளில் ரு.20 கோடி மதிப்பில் முதற்கட்டமாக வைபை, கணினி, உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தி ஸ்மார்ட் கிளாஸ் வகுப்புகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது, என, தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் டாக்டர் மணிகண்டன் பேசினார்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் நடைபெற்ற உழைக்கும் மகளிருக்கான அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் விழாவில் கலெக்டர் நடராஜன் தலைமை வகித்தார்.

விழாவில் 100 பெண்களுக்கு முதற்கட்டமாக அம்மா இருசக்கர வாகனம் வழங்கி திட்டத்தை தொடங்கிவைத்த தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் டாக்டர் மணிகண்டன் பேசியதாவது:

இதயதெய்வம் புரட்சி தலைவி அம்மா பெண்களின் நலனை பாதுகாத்திடும் விதமாகவும், அவர்தம் பாதுகாப்பினை உறுதி செய்திடும் வைகயிலும் எண்ணற்ற மகளிர் நலத்திட்டங்களை செயல்படுத்தியுள்ளார்கள். அந்தவகையில் 2016 ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நேரத்தில், புணிபுரியும் ஏழை மகளிர் பயன்பெறும் வகையில் அம்மா இரு சக்கர வாகன திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவித்தார்.

அம்மா அறிவித்து நடைமுறைப்படுத்திய அனைத்து திட்டங்களையும், அவர்கள் வழியில் செயல்படும் இவ்வரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.

அதனடிப்பட்டையில்,தமிழ்நாடு அரசின் முலம் இத்திட்டம் துவங்கப்பட்டு பயனாளிகளுக்கு புதியதாக வாங்கும் இரு சக்கர வாகனத்தின் விலையில் 50 சதவீத அல்லது ரு.25 ஆயிரம் இவற்றில் எது குறைவோ அந்த தொகை மானியமாக வழங்கப்படுகிறது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் இவ்வாண்டில் ஊரக பகுதிகளுக்கு ஆயிரத்து 340 வாகனங்களும், நகர்புற பகுதிகளுக்கு 580 வாகனங்கள் என மொத்தம் ஆயிரத்து 920 வாகனங்கள்ச ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதனடிப்படையில் இன்றைய தினம் முதற்கட்டமாக 100 பயனாளிகளுக்கு அம்மா இருசக்கர வாகனம் வழங்கப்பட்டுள்ளது. இது தவிர மகளிர் நலனை உறுதி செய்திடும் வகையில் ஏழை பெண்களின் திருமணத்திற்கு விலையில்லாமல் 8 கிராம் தங்கம் மற்றும் நிதிஉதவி வழங்கும் திட்டம் கர்ப்பிணி தாய்மார்களுக்கு மகப்பேறு உதவித்தொகை வழங்கும் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இதுதவிர தகவல் தொழில்நுட்பத்துறையின் முலம் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ், அரசு கேபிள் நிறுவனத்திற்கு டிஜிட்டல் உரிமம் பெறப்பட்டு குறைந்த கட்டணத்தில் தரமான முறையில் அதிக டிவி சேனல்களைபார்த்து மகிழ்ந்திடும் வகையில் அரசு கேபிள் செட்டாப்பாக்ஸ் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும், மாவட்டத்தில் உள்ள ராமநாதபுரம், திருப்புல்லாணி, மண்டபம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 39 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு,அந்தந்த கிராமங்களில் உள்ள அரசு பள்ளிகளில் ரு.20 கோடி மதிப்பில் முதற்கட்டமாக வைபை, கணினி, உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தி ஸ்மார்ட் கிளாஸ் வகுப்புகள் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது .
இவ்வாறு அமைச்சர் டாக்டர் மணிகண்டன் பேசினார்.

விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி, ராமநாதபுரம் ஆர்டிஓ டாக்டர் சுமன், மகளிர் திட்ட அலுவலர் குருநாதன், மாவட்ட மத்திய கக்ஷட்டுறவு வங்கி தலைவர் ஜெயஜோதி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அண்ணாதுரை உட்படபலர் பங்கேற்றனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!