பெரம்பலூர் அருகே குடும்ப தகராறில் மனைவி-கணவன் அடுத்தடுத்து தூக்கிட்டு தற்கொலை!

schedule
2020-05-27 | 18:12h
update
2020-05-27 | 18:12h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Wife-husband commits suicide after family dispute near Perambalur

பெரம்பலூர் மாவட்டம், கை.களத்தூர் அருகே உள்ள காரியானூர் கிராமத்தில், குடும்பத்தகராறு காரணமாக மனைவியும், கனவனும் அடுத்தடுத்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம், நல்லம்பாளையம் கிராமத்தை சேர்ந்த ராமலிங்கம் மகன் கணேசன் (வயது 25 ), என்பவருக்கும், பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், காரியானூர் கிராமத்தை சேர்ந்த செல்லமுத்து மகள் சத்தியதேவி(22) என்பவருக்கும் கடந்த 2019 ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

Advertisement

இதனிடையே நிறை மாத கர்ப்பிணியாக இருந்த கடந்த சத்தியதேவி கடந்த சுமார் 6 மாதத்திற்கு முன்னர் காரியானூர் கிராமத்திலுள்ள அவரது பெற்றோர் வீட்டிற்கு பிரசவத்திற்காக வந்திருந்த நிலையில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்து 5 மாதம் ஆகிறது.

இந்நிலையில் அவ்வப்போது மனைவி மற்றும் குழந்தையை பார்க்க வந்து செல்லும் கணேசன், வழக்கம் போல் நேற்று முன்தினம காரியானூர் கிராமத்திற்கு வந்து, மனைவியிடம் வா ஊருக்கு போகலாம் என கூறியுள்ளார். கணேசனுக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருப்பதால் அவருடன் செல்ல சத்தியதேவி மறுத்ததாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக கணவன்- மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்ப தகராறில் ஆத்திரமடைந்த கணேசன் சத்தியதேவியை தாக்கியதால், மனமுடைந்த சத்தியஜோதி(22), வீட்டினுள் உள்ள ஒரு அறையில் பொருத்தப்பட்டிருந்த மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார், இதனையறிந்த அவரது குடும்பத்தார் உள்ளிட்ட உறவினர்கள் சத்தியதேவியை மீட்டு அதே பகுதியில் கூகையூர் கிராமத்தில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

அங்கு சத்தியதேவி பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டார் கூறியுள்ளனர். இதனை செல்போன் மூலம் அறிந்த கணேசன், மனைவி இறந்த துக்கம் தாளாமலும், பயத்தினாலும் அதே அறையில் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவல் அறிந்த கை.களத்தூர் போலீசார் டிஎஸ்பி.,தேவராஜன் தலைமையில் சம்பவ இடத்திற்கு சென்று இருவரது உடல்களையும் கைப்பற்றி, உடற்கூறு ஆய்வுக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குடும்பத்தகராறில் ஆத்திரமடைந்து மனைவியும், கனவனும் தங்களது 5 மாத கைக்குழந்தையை பற்றி கவலை கொள்ளாமல், அடுத்தடுத்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
13.07.2026 - 09:39:43
Privacy-Data & cookie usage: