மருந்து வாங்க பணமில்லாததால் தாய் தனது 4 குழந்தைகளுடன் விஷம் தின்று தற்கொலைக்கு முயற்சி!

schedule
2019-01-05 | 18:15h
update
2019-01-05 | 18:15h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Without taking money to buy medicine, mother tried to commit suicide with 4 kids poisoning!

பெரம்பலூர் அருகே 4 குழந்தைகளை பெற்ற தாய், மருந்து வாங்க பணம் இல்லாததால் மனம் வெறுத்து தனது 4 குழந்தைகளுடன் விஷம் தின்று தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள அந்தூர் கிராமத்தை சேர்ந்வர் பிரபு (வயது சுமார் 37), இவர், சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் சம்சா தயாரிக்கும் பணி செய்து வருகிறார். இவரது மனைவி சிவகாமி (வயது 32), மற்றும் குழந்தைகள் பிரித்திகா (வயது 10), கோபிகா (8), கபிலன் (5), கரண் (5) ஆகிய நான்கு குழந்தைகளுடன் அந்தூரில் வசித்து வருகிறார். சுமார் 5 ஆண்டுகளாக முன்பு உடல் நலம் பாதிக்கப்பபட்டதால் சிவகாமி தொடர்ந்து மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் மாத்திரை சாப்பிட்டு வந்துள்ளார். இந்நிலையில் கடந்த இரு மாதங்களாக மாத்திரை எடுத்துக் கொள்ளாததால் சோர்வடைந்த சிவகாமி மனதளவிலும் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், கணவர் பிரபுவும் வந்து பார்க்காமல் இருந்துள்ளார். இதனால் மனம் வெறுத்த சிவகாமி இன்று மாலை எலிக்கு வைக்கப்படும் பேஸ்ட்டை தனது நான்கு குழந்தைகளுக்கு கொடுத்து தானும் தின்று தற்கொலைக்கு முயன்றுள்ளார். இது அக்கம்பக்கத்தினருக்கு தெரிய வந்துள்ளதை அடுத்து உடனடியாக, 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் அவர்களை பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து குன்னம் காவல் நிலையத்தினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
12.04.2026 - 22:33:03
Privacy-Data & cookie usage: