பெரம்பலூர் அருகே மோட்டார் சைக்களில் இருந்து தவறி விழுந்த பெண் சாவு! போலீசார் விசாரணை!!

schedule
2019-12-05 | 05:24h
update
2019-12-05 | 05:24h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Woman dies after falling off a motorcycle near Perambalur Police are investigating !!

பெரம்பலூர் அருகே மோட்டார் சைக்களில் இருந்து தவறி விழுந்த பெண் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.

Advertisement

பெரம்பலூர் மாவட்டம், செட்டிக்குளம் அருகே உள்ள பொம்மனப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 64), விவசாய தொழிலாளியான இவர் கடந்த நவ.30 தேதியன்று, அவரது மனைவி மலர்க்கொடி (வயது 50) அழைத்துக் கொண்டு வெங்கலம் கிராமத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். வண்டி, செஞ்சேரி – எளம்பலூர் தண்ணீர் பந்தல் சுற்றுச் சாலையில் சென்று கொண்டிருந்த போது, ஆலம்பாடி பிரிவு சாலை அருகே மலர்க்கொடி திடீரென மயங்கி வண்டியில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த மலர்க்கொடியை அங்கிருந்தவர்கள் உதவியுடன் பெரம்பலூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தார். சிகிச்சை பெற்று வந்த மலர்க்கொடி நேற்றிரவு பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து மலர்க்கொடியின்அண்ணன் அ.மேட்டூரை சேர்ந்த செல்வராஜ் கொடுத்த புகாரின் பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
09.07.2026 - 23:18:24
Privacy-Data & cookie usage: