பெரம்பலூர் அருகே பைக்கில் சேலை சிக்கியதால் பெண் பலி!

schedule
2022-09-09 | 16:53h
update
2022-09-09 | 16:53h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Woman dies after saree gets caught in bike wheel near Perambalur!

பெரம்பலூர் மாவட்டம், வடகரை அருகே உள்ள மாவிலிங்கை கிராமத்தை சேர்ந்தவர் செல்வாம்பாள் (வயது41). இவரது கணவர் செல்லமுத்து வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் செல்வாம்பாள் இன்று தொண்டப்பாடியில் உள்ள உறவினர் வீட்டு விருந்து நிகழ்ச்சிக்கு செல்ல, மாவிலிங்கையில் இருந்து பஸ்சில் வேப்பந்தட்டைக்கு வந்தார். பின்னர், வேப்பந்தட்டையில் இருந்து தொண்டப்பாடிக்கு செல்ல , சகுந்தலா என்பவரின் பைக்கில் லிப்டு கேட்டு சென்றுள்ளார். அப்போது பாலையூர் அருகே சென்ற கொண்டிருக்கும் போது பைக் சக்கரத்தில் சேலை சிக்கியது. இதில் நிலைக்குலைந்து கீழே விழுந்துள்ளார். இதில் படுகாயம் அடைந்த செல்வாம்பாளை அருகில் இருந்தவர்கள் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு போய் சேர்த்தனர். அங்கு சிகிச்சையின் போது, செல்வாம்பாள் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வி.களத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

விளம்பரம்:

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
17.06.2026 - 21:01:07
Privacy-Data & cookie usage: