100 நாள் வேலை திட்ட பணியில் பெண் பலி : நடவடிக்கை கோரி, பெரம்பலூர் அருகே ஊராட்சி அலுவலகம் முற்றுகை

schedule
2020-09-19 | 17:24h
update
2020-09-19 | 18:30h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Woman killed in 100 day’s work project: Panchayat office besieged near Perambalur, demanding action

பெரம்பலூர் மாவட்டம், திம்மூர் கிராமத்தில், கடந்த செப். 16 அன்று தேசிய ஊரக வேலை திட்டத்தில் பணிபுரிந்த சீனிவாசன் மனைவி ஜெயலட்சுமி க.பெ சீனிவாசன் என்பவர் சட்ட விரோத எந்திர பயன் பாட்டினால் டிராக்டர் மோதி பலியானார். இந்த சம்பவத்தை மறைக்க சம்தப்பட்ட அரசு அதிகாரிகள் முயற்சி செய்துள்ளனர். இது குறித்து அக்கிராம மக்கள் 17.9.2020 அன்று பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரிடம் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து விவசாய தொழிலாளர் சங்க மாநில பொதுச் செயலாளருக்கு மனு அளித்ததை தொடர்ந்து 19.9.2020 அன்று விதொச மாவட்ட செயலாளர் பி.ரமேஷ் தலைமையில் திம்மூர் கிராமத்திற்கு சென்று பொதுச்செயலாளர் அமிர்தலிங்கம், மாநில செயலாளர் பழனிசாமி, திருச்சி மாவட்ட செயலாளர் சந்திரன், மாவட்ட துணைத் தலைவர் கோகுலகிருஷ்ணன் நாம் தமிழர் கட்சி குன்னம் தொகுதி செயலாளர் ராஜோக்கியம் ஆகியோர் பலியான ஜெயலட்சுமி வீட்டிற்கு சென்று குடும்பத்தினரிடம் ஆறுதல் கூறினர். பின்னர் கிராம பொது மக்களுடன் ஊராட்சி மன்ற அலுவலகம் சென்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement

தகவலறிந்த வந்த ஆலத்தூர் துணை வட்டாட்சியர் மற்றும் வருவாய் ஆய்வாளா; இது குறித்து ஊராட்சி செயலாளா; கருப்பையா பணியிடை நீக்கம் செய்துள்ளதாகவும் பணிமேற்பார்வையாளர் மதீனா இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்க மனு அளித்து போராட்டத்தை கைவிட கேட்டுக்கொண்டதை அடுத்து மாநில பொதுச்செயலாளர் தலைமையில் மனு அளிக்கப்பட்டது. அம்மனுவில் திம்மூர் ஊராட்சி புதுஏரி அருகே 16.9.2020 அன்று கசிவுநீர் குட்டை அமைக்கும் பணியில் சட்ட விரோதமாக ஜேசிபி மற்றும் டிராக்டர் எந்திரங்கள் பயன்படுத்தியும் அப்போது பணியில் ஈடுபட்டிருந்த ஜெயலட்சுமியின் மீது டிராக்டர் ஏரி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்துள்ளார். ஆனால் ஊராட்சி நிர்வாகமோ 108 ஆம்புலன்ஸ் வாகனத்தை அழைத்தால் வழக்காகி விடும் என்று ஒரு மணி நேரத்திற்கு மேலாகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை தகவல் அறிந்து வந்த ஜெயலட்சுமியின் கணவர் உடனடியாக தனியார் வாகனத்தில் அழைத்து மருத்துவமனைக்கு செல்லும் வழியிலே உயிரிழந்துள்ளார். எனவே, ஊரக வேலை திட்டத்தில் சட்டவிரோதமாக எந்திரங்களை பயன்படுத்த உறுதுணையாக இருந்த வட்டார வளர்ச்சி அலுவலர் தொழில் நுட்ப அலுவலர்கள், ஊராட்சி நிர்வாகத்தினர் மீது குற்ற வழக்கு பதிவு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பலியான ஜெயலட்சுமியின் குடும்பத்திற்கு ரூபாய் 20 லட்சும் நஷ்ட ஈடு வழங்கி அவரது கணவருக்கு அரசுப் பணியும் அவரது இரண்டு குழந்தைகளின் கல்விச் செலவை அரசே ஏற்க வேண்டும் என அனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உடனடியாக நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் தற்போது பெரம்பலூருக்கு தமிழக முதல்வர் வருகை தர உள்ளதால் வருகையின் போது விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கருப்பு கொடி காண்பித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
02.06.2026 - 19:15:17
Privacy-Data & cookie usage: