பெரம்பலூர் அருகே இடி-மின்னல் தாக்கியதில் கணவர் கண் எதிரே மனைவி பலி !

schedule
2019-10-16 | 16:25h
update
2019-10-16 | 16:26h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Woman kills of lightning near Perambalur
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம், பெருநிலா கிராமத்தைச் சேர்ந்தவர் மகேந்திரன்.இவரது மனைவி கவிதா (வயது 35). இவர்கள் விவசாயத்துடன் கறவை மாடும் வளர்த்து வருகின்றனர். இவர்களுக்கு திருமணமாகி ஜவகர் (வயது 12) என்ற மகனும், முத்துமணி (வயது 10) என்ற மகளும் உள்ளனர்.

Advertisement

இந்நிலையில் இன்று கவிதாவும், மகேந்திரனும் ஊருக்கு அருகில் உள்ள தனது வயலில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தனர். மாலையில் திடீரென கருமேகம் சூழ்ந்து இடி மின்னலுடன் மழை பெய்தது.

அப்போது கவிதா மழைக்கு பயந்து தனது வயலில் உள்ள மரத்தடியில் போய் தங்கினார். அப்போது பலத்த சத்தத்துடன் மின்னல் தாக்கியது. இதில் மரத்தடியில் நின்றிருந்த கவிதா மீது மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்தின்போது கவிதாவின் கணவர் மகேந்திரன் அருகிலுள்ள வயலில் மாட்டுக்கு தீவனப்பயிர் அறுத்துக் கொண்டிருந்தார். சத்தம் கேட்டு திரும்பி பார்த்த போது மனைவி திடீரென மயங்கி கீழே விழுந்தது கண்டு அதிர்ச்சி அடைந்த, அவர் செய்வது அறியாது திகைத்து நின்றார்.

இது குறித்து தகவல் அறிந்த கை.களத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கவிதாவின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கணவர் கண் எதிரே மனைவி மின்னல் தாக்கி பலியான சம்பவம் பெருநிலா கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. மேலும் கை.களத்தூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
01.07.2026 - 13:48:24
Privacy-Data & cookie usage: