சாணி பவுடர் குடித்த பெண் மருத்துவ மனைக்கு செல்லும் வழியில் சாவு! பெரம்பலூர் போலீசார் விசாரணை!

schedule
2022-05-05 | 16:39h
update
2022-05-05 | 16:39h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Woman who drank dung powder dies on the way to hospital! Perambalur police are investigating!

பெரம்பலூர் மாவட்டம், குரும்பலூர் பேரூராட்சிக்கு உபட்ட பாளையம் அண்ணா நகரை சேர்ந்தவர் சங்கர். இவரது மனைவி கவிதா (37), இவர்களுக்கு திருமணம் நடந்து 15 ஆண்டுகளாகி அபிஷேக் (15), ஜீவிதா (11) என இரு குழந்தைகள் உள்ளனர்.

Advertisement

கடந்த சில மாதங்களாக கணவன் – மனைவி இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த 3 மாதங்களாக கவிதா அவரது பெற்றோர் ஊரான கொப்பம்பட்டிக்கு சென்று தங்கியிருந்த அவர், கடந்த 4 நாட்களுக்கு முன்புதான் பாளையம் வந்துள்ளார். ஊருக்கு வந்தவர் யாரிடமும் பேசாமல் மன உளைச்சலில் தனியாக இருந்தாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று 12:30 மணி அளவில் அவரது வீட்டில் இருந்த சாணி பவுடரை சாப்பிட்டுவிட்டுதாக அருகில் இருந்தவர்களிடம் தெரிவித்தார். அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை சொந்த மோட்டார் சைக்கிள் மூலம் பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக 108 மூலம் திருச்சிக்கு சென்று கொண்டிருந்த போது செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். கவிதாவின் உடல், பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
11.06.2026 - 11:35:54
Privacy-Data & cookie usage: