கோவை நெகமம் அடுத்த மரம்பிடுங்கிகவுண்டனூரில் 4 வயது குழந்தையுடன் இளம் பெண் கல்லுக்குழியில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
நெகமம் அருகே உள்ள மரம்பிடுங்கிகவுண்டனூரை சேர்ந்தவர் மணிமேகலை, 20. இவரது கணவர் அஜித்குமார் கடந்த 2021ம் ஆண்டு இறந்து விட்டார். மணிமேகலையின் பெற்றோர்களும் ஏற்கனவே இறந்து விட்டனர். மணிமேகலை உறவினர் வீட்டில் தங்கி வசித்து வந்தார். மணிமேகலைக்கு 4 வயதில் யாதவ் என்ற மகன் உள்ளார். மணிமேகலை தனது குழந்தையை எப்படி வளர்ப்பது என எண்ணி மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். மனம் உடைந்த மணிமேகலை தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்து, தனது மகன் யாதவை வயிற்றில் துண்டை வைத்து கட்டிக்கொண்டு மரம்பிடுங்கிகவுண்டனூரில் உள்ள ஒரு கல்லுக்குழியில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். அவ்வழியில் சென்றவர்கள் இதை கவனித்து நெகமம் போலீஸ், தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த தீயனைப்பு மீட்பு துறையினர் தண்ணீரில் மிதந்த நிலையில் இருந்த இருவரையும் மீட்டனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.