பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டநிதி உதவியைப் பெற விண்ணப்பிக்கலாம் : நாமக்கல் கலெக்டர்

schedule
2018-05-13 | 19:56h
update
2026-04-29 | 01:03h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Women’s Child Protection Fund can apply for help: Namakkal Collector

நாமக்கல் : பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம் மூலம் வழங்கப்படும் நிதி உதவியைப் பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Advertisement

இதுகுறித்து நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

பெண் குழந்தைகளின் அனைத்து நலன்களையும் உறுதி செய்யவும், பெண் கல்வியை மேம்படுத்தவும், பெண் சிசு வதையை ஒழிக்கவும், ஆண் குழந்தைகளை விரும்பும் மனப்போக்கை மட்டுப்படுத்தவும் 1992 ம் ஆண்டு முதல் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

35 வயதுக்குள் உள்ள பெற்றோர் எவரேனும் ஒருவர் இரண்டாவது பெண் குழந்தை பிறந்து, குடும்பநல அறுவை சிகிச்சை செய்து கொண்டு மூன்று ஆண்டுகளுக்குள் இ-சேவை மையம் மூலம் விண்ணப்பித்தால் மாவட்ட சமூகநல அலுவலகத்தின் மூலம் பெண் குழந்தைகளுக்கு தலா ரூ. 25 ஆயிரம் சேமிப்புப் பத்திரமாக வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு சம்மந்தப்பட்ட பகுதி வட்டார வளர்ச்சி அலுவலரை அணுகலாம் என தெரிவித்துள்ளார்.

Tags: Namakkal
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
29.04.2026 - 01:03:45
Privacy-Data & cookie usage: