Women’s Entitlement Amount: First Phase Registration Camps Begin Tomorrow; Perambalur Collector Information!
பெரம்பலூர் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பப் பதிவு முகாம்கள் 2 கட்டங்களாக நடைபெற உள்ளன. முதல்கட்ட விண்ணப்பப் பதிவு முகாம் 24.07.2023 முதல் 04.08.2023 வரை நடைபெறும். இரண்டாம் கட்ட முகாம் 05.08.2023 முதல் 16.08.2023 வரை நடைபெறும்.
முதல் கட்ட முகாம்கள் பெரம்பலூர் வருவாய் வட்டத்தில், வேலூர், மேலப்புலியூர்(கிழக்கு), மேலப்புலியூர்(மேற்கு), இலாடபுரம்(கிழக்கு), அம்மாபாளையம், பொம்மனப்பாடி, சத்திரமனை, களரம்பட்டி ஆகிய வருவாய் கிராமங்களிலும், வேப்பந்தட்டை வருவாய் வட்டத்தில் மலையாளப்பட்டி, உடும்பியம், தொண்டமாந்துறை(மேற்கு), தொண்டமாந்துறை(கிழக்கு), வேப்பந்தட்டை(வடக்கு), வேப்பந்தட்டை(தெற்கு), வெங்கனூர், வெண்பாவூர் ,தழுதாழை, வெங்கலம் (மேற்கு), வெங்கலம் (கிழக்கு) ஆகிய வருவாய் கிராமங்களிலும், குன்னம் வருவாய் வட்டத்தில் புதுவேட்டக்குடி, ஓலைப்பாடி(கிழக்கு), ஓலைப்பாடி(மேற்கு), துங்கபுரம் (வடக்கு), துங்கபுரம்(தெற்கு), வடக்கலூர், பரவாய்(கிழக்கு), பரவாய்(மேற்கு), வசிஷ்டபுரம், ஒகளுர்(மேற்கு), ஒகளுர்(கிழக்கு), கிழுமத்தூர்(தெற்கு), கிழுமத்தூர்(வடக்கு), பெரியம்மாபாளையம், அத்தியூர்(வடக்கு), அத்தியூர்(தெற்கு) திருமாந்துறை, வயலப்பாடி, பெரியவெண்மணி(மேற்கு), பெரியவெண்மணி(கிழக்கு), குன்னம், கீழப்பெரம்பலூர், சு.ஆடுதுறை, வரகூர், அகரம் சீகூர், கொளப்பாடி, காடூர் (தெற்கு), காடூர் (வடக்கு), பெண்ணக்கோணம்(தெற்கு) ஆகிய வருவாய் கிராமங்களுக்கும், ஆலத்தூர் வருவாய் வட்டத்தில் செட்டிகுளம், நாட்டார்மங்கலம், நாரணமங்கலம், மாவிலங்கை, இரூர், புதுஅம்மாபாளையம், பாடாலூர்(கிழக்கு), பாடாலூர்(மேற்கு), சிறுவயலூர், து.களத்தூர், கண்ணப்பாடி, தேனூர், நக்கசேலம், எலந்தலப்பட்டி ஆகிய வருவாய் கிராமங்களில் அமைந்துள்ள நியாய விலைக் கடைப் பகுதியில் விண்ணப்பப் பதிவு முகாம்கள் நடைபெறும்.
குரும்பலூர் பேரூராட்சிப் பகுதியில் குரும்பலூர்(வடக்கு), குரும்பலூர்(தெற்கு) ஆகிய வருவாய் கிராமங்களுக்கும், பூலாம்பாடி பேரூராட்சிப் பகுதியில் பூலாம்பாடி (மேற்கு), பூலாம்பாடி(கிழக்கு) ஆகிய வருவாய் கிராமங்களிலும், அரும்பாவூர் பேரூராட்சிப் பகுதியில் அரும்பாவூர் வருவாய் கிராமத்திற்கும், லப்பைக்குடிக்காடு பேரூராட்சிப் பகுதியில் பெண்ணக்கோணம்(வடக்கு) வருவாய் கிராமங்களில் உள்ள நியாய விலைக் கடைப் பகுதியில் முதல் கட்டமாக விண்ணப்பப் பதிவு முகாம்கள் நடைபெறும்.
பெரம்பலுார் மாவட்டத்தில் மீதமுள்ள பகுதிகளில் இரண்டாம் கட்டமாக 05.08.2023 முதல் 16.08.2023 வரை முகாம்கள் நடைபெறும்.
நியாயவிலைக் கடைப் பணியாளர் ஒவ்வொரு நியாய விலைக் கடைப் பகுதியில் முகாம்கள் நடைபெறும் நாள் மற்றும் நேரம் ஆகியவற்றைக் குறிப்பிட்டு, ஒவ்வொரு குடும்பத்திற்கும் விண்ணப்பம் மற்றும் டோக்கன் ஆகியற்றினை வீடு வீடாகச் சென்று வழங்கியுள்ளார்கள்.
விண்ணப்பத்தைப் பெற்றுக்கொண்ட குடும்பத்தில் உள்ள குடும்பத்தலைவி விண்ணப்பங்களை பூர்த்தி செய்து நேரடியாக விண்ணப்பப் பதிவு முகாம் நடைபெறும் இடத்திற்கு குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் எடுத்து வர வேண்டும். விண்ணப்பம் பதிவு செய்யும்போது சரிபார்ப்புக்காக ஆதார் அட்டை, குடும்ப அட்டை கட்டாயம் கொண்டுவர வேண்டும். மேலும், மின் கட்டண அட்டை, வங்கி கணக்குப் புத்தகம் ஆகியவை இருந்தால் அவற்றையும் எடுத்து வர வேண்டும். வங்கிக்கணக்கு இல்லாதவர்களுக்கும், முகாமிலேயே வங்கிக்கணக்கு துவங்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பத்துடன் எவ்வித ஆவணங்களையும் நகல் எடுத்து இணைக்கத் தேவையில்லை.
விண்ணப்ப பதிவு ஞாயிற்றுக்கிழமை உட்பட அனைத்து முகாம் நாட்களிலும், காலை 9.30 மணி முதல் 1 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் 5:30 மணி வரையும் நடைபெறும். முகாம் நடைபெறும். எந்த நாளில் எந்த குடியிருப்புகள், தெருக்கள், வார்டைச் சேர்ந்தவர்கள் வரவேண்டும் என்பது குறித்த விவரங்கள் நியாயவிலைக் கடைகளில் தகவல் பலகையாக வைக்கப்படும்.
எனவே பொதுமக்கள் முகாமிற்கு கூட்டமாக வருவதை தவிர்த்து தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நாளில் ஒதுக்கப்பட்டுள்ள நேரத்தில் வருகை தந்து ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். முகாமில் குடும்பத் தலைவியின் விரல் ரேகை பதிவு பயோமெட்ரிக் முறையில் எடுக்கப்படுவதால் குடும்பத் தலைவிகள் மட்டுமே முகாமிற்கு விண்ணப்பங்களை கொண்டு வரவேண்டும்.
பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் தமிழக அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும், என கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார்.

Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!