பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் பெண்கள் உதவி மையம்

schedule
2021-06-23 | 17:24h
update
2021-06-23 | 17:24h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Women’s Help Desk in all police stations in Perambalur district

பெரம்பலூர் போலீஸ் எஸ்.பி எஸ்.மணி தலைமையில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து வரும் புகார்களை பதிவு செய்யவும் அவசர அழைப்பிற்கு உடனே செல்லவும் முதற்கட்டமாக பெரம்பலூர் காவல் நிலையம், பாடாலூர் காவல் நிலையம், மங்களமேடு காவல் நிலையம் மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலையம் ஆகிய காவல் நிலைய பெண் காவலர்களுக்கு 4 இரு சக்கர வாகனங்களும், 4 மடிகணினியும் வழங்கப்பட்டது. உதவி மையத்திற்கு போன் செய்தால் உடனே பெண் காவலர்கள் இருப்பிடத்திற்கே தேடிச்சென்று தேவையான உதவிகள் செய்வார்கள் என தெரிவிக்கப்பட்டது.

Advertisement

இந்த நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையிடம் ஆரோக்கியபிரகாசம், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் நீதிராஜ் (பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு), பெரம்பலூர் மாவட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் சரவணன், துணைக் காவல் கண்காணிப்பாளர் (பயிற்சி) பெனாசீர் பாத்திமா, காவல் ஆய்வாளர் அஜீம் மற்றும் ஒருங்கிணைந்த சேவை மைய ஒருங்கிணைப்பாளர், மன நல மருத்துவர் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், பெண்கள் மற்றும் குழந்தைகள் உதவி மையத்தை தொடர்பு கொள்ள 112, 181 என்ற இலவச தொலைபேசி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
11.06.2026 - 08:53:33
Privacy-Data & cookie usage: