மகளிர் சுய உதவி குழு உற்பத்தி பொருட்களை சென்னை விற்பனைக்கு பதிவு செய்ய அழைப்பு : பெரம்பலூர் கலெக்டர்

schedule
2022-03-14 | 15:10h
update
2022-03-14 | 15:10h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Women’s Self Help Group Call for registration of products for sale in Chennai: Perambalur Collector

பெரம்பலூர் கலெக்டர் வெங்கடபிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

பெரம்பலூர் மாவட்ட, மகளிர் திட்டத்தின் கீழ் செயல்படும் மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை சங்கத்தின் மூலம் ஊரக, நகர்புற மகளிர் சுய உதவிக் குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை சந்தைப்படுத்த பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக 2022-23-ம் ஆண்டு கோடை கொண்டாட்டத்தை முன்னிட்டு தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம், சென்னை அன்னை தெரசா மகளிர் வளாகத்தில், ஏப்ரல் மாதம் மாநில அளவிலான கண்காட்சி நடைபெறவுள்ளது. இக்கண்காட்சியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள ஊரக, நகர்புற மகளிர் சுய உதவிக் குழுக்கள் தங்களுடைய தீர்மான நகல், உற்பத்தி செய்யும் பொருட்களின் மாதிரி, ஆதார்
அட்டை, உற்பத்தி பொருள் குறித்த பதிவு சான்று, வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றை 18.03.2022 அன்று மாலை 5.00 மணிக்குள் மாவட்ட அலுவலகத்தில் பதிவு செய்ய அறிவுறுத்தப்படுகிறது.

Advertisement

எனவே, இத்தகவலுடன் திட்ட இயக்குநர், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு (மகளிர் திட்டம்) தரை தளம், மாவட்ட ஆட்சியரகம் பெரம்பலூர் -621212 என்ற முகவரியில் மேலாளர் மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை சங்கம் (98431 90666) மற்றும் உதவி திட்ட அலுவலர் – வாழ்வாதாரம் (9842327404) ஆகியோரின் கைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தங்களது தகவல்களை பதிவு செய்து கொண்டு மகளிர் திட்டத்தின் மூலம் ஏற்படுத்தி தரப்படும் கண்காட்சியில் கலந்து கொண்டு விற்பனை வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
11.06.2026 - 18:59:51
Privacy-Data & cookie usage: