Women’s strength and weakness Part 2 – JJ

சென்ற வாரக் கட்டுரையின் தொடர்ச்சியாக இந்த வாரக் கட்டுரையை பெண்களின் பலம் பற்றியும் அவர்களது பலவீனம் பற்றியும் இந்த இரண்டும் பெண்ணின் திருமணத்திற்கு பிறகு தனது தாக்கத்தை ஏற்படுத்தும் விதம் பற்றி சற்றே விவரமாக எழுதலாம் என்று எத்தனிக்கிறேன்.

பெண் குழந்தைகள் வளர்ப்பு அக்காலத்திலும் இன்றும் என்பதை சில ஒற்றுமை மற்றும் வேற்றுமை, காலத்தின் கட்டாயம், தொழில்நுட்ப வளர்ச்சி நன்மைகள் தீமைகள் பற்றி கட்டுறையில் சற்று விரிவாக விவரித்துள்ள நிலையில் பெண் குழந்தைகள் இந்த ஆரம்ப கால வளர்ப்பு பின் வரும் காலங்களில் அவர்களது ஒவ்வொரு காலக்கட்டத்திலும் பெண்களின் பலமாகவும் பலவீனமாகவும் எப்படி உருமாறுகிறது என்பதனை இந்த கட்டுறையில் பதிவிட விரும்புகிறேன்.

பெண்கள பெரும்பாலும் எல்லாவற்றிற்கும் துணிந்தவர்களே! ஆனால் அதன் வெளிப்பாடு மட்டும் மாற்றம் காண்கிறது ஒவ்வொரு காலக்கட்டத்திற்கேற்ப; பெண்கள் தங்களது பலமாக நினைப்பது மெரும்பாலான சமயங்களில் பலவீனமாவதும் உண்டு; பலவீனம் என்று நினைந்த விஷயங்கள் பலமாக அதுவும் பெரும்பலமாக மாறுவதும் உண்டு.

தனது பலம் என்று ஒரு பெண் நினைப்பது அவளை வீழ்த்துவதும், வாழ்க்கையில் சறுக்கல்களை ஏற்படுத்துவதும்; தனது பலவீனம் என்று அவள் நினைத்தது அவளை நினைத்துப்பார்க்க முடியாத அளவுக்கு அவளது வாழ்க்கைத்தரத்தை உயர்த்தி விடுவதும் மிகச் சாதாரணமாக வாழ்க்கையில் நடக்கும் நடப்புகள்.

இப்பொழுது பெண்ணிண் திருமண வாழ்க்கையைப் பற்றி சிறிது விவாதிப்போம். பள்ளிப் பருவம் முடிந்து, கல்லூரி வாழ்க்கை முடிந்து சில பெண்கள் பணிக்கு சென்ற பின்னரே இப்பொழுதெல்லாமெ திருமணம் பற்றி யோசிக்கின்றனர்.

பணிக்குச் சென்று தமது சொந்தகாலில் நிற்க பழகிப்கொண்ட பெண்களுக்கு சுயமரியாதையும் தன்னம்பிக்கையும், பொழுளாதார சுதந்திரமும் சற்றே அதிகமாக காணம்படுவதில் வியப்பொன்றும் இல்லையே! மேலே குறிப்பிட்டுள்ள குணாதிசயங்கள் பெண்கள் தங்கள் திருமணத்திற்குப் பிறகு கணவர் வீட்டாருடன் மிகுந்த. ஒத்துழைப்மோடும் பாசம் மற்றும் கணிவோடும் புரிந்துப்கொண்டு, அவர்களுக்குண்டான மரியாதை மற்றும் இடத்தை அறிந்து தெரிந்து வைத்து அதற்க்கேற்றாற்போல் தன்னை மாற்றிக்கொண்டு,

அதனால் அநத பெண்ணும் பயனடைந்து தான் நினைத்ததை குடும்ப வாழ்விலும் சரி தனது பணியிடத்திலும் சரி தன்னை நிலைநிறுத்தி கணவனுக்கு நல்ல மனைவியாக செயல்பட்டு வெற்றி அடைந்து உச்சத்தை தொட்டுவிட்டாரால் தனது சுயமரியாதையுத் சுதந்திரமும் , தன்னம்பிக்கையும் மெரும்பலமாக அமைந்துவிடுகிறது.

இந்த பலம் அம்பெண்ணின் சமுதாய அந்தஸ்தையும் உயரச்செய்து அவளுக்கு இன்னும் மழியாதையையும் பெருமையையும் சேர்த்துவிடுகிறது. இந்த மாதிரியான சந்தர்ப்பத்தில் அப்பெண்ணுக்கு அவளது குணங்களும் அன்பும் பலமாகவே மாறிவிடுகிறது.

மாறாக அவளது கருத்து சுதந்திரம், சுயமரியாதையும் , பொருளாதார சுதந்திரமும் தன்னம்பிப்கையும் அளவு கடந்து அவளுக்கு ஒரு கர்வத்தையும், மற்றவரகளை மதியாமை, தலைக்கணம், எல்லாவற்றிற்கும் விவாதிப்பது போன்ற குணங்களை அதிகரித்துக்கொண்டாள் எனில் அவளது வாழ்வு மட்டுத் அல்லாது அவளை சுற்றியுள்ள அத்தனை உறவுகளையும் இத்த குணங்கள் பாதிக்கும்; பாதுப்பதோடு அல்லாமல் தன்னை சார்த்தவழ்கள் மிகவும் கஷ்டத்திற்குள்ளாக்கி சில சமயங்களில் குடும்பங்கள் சிதைந்து போகும் அளவுக்கு கொண்டு சென்று விடும்.

முன்னே பா ர்த்த பலமே பெண்களுக்கு பலவீனமாக மாறுவது இப்படித்தான் என்பது மறுக்கமுடியாத உண்மை. இத்தகைய அசாதாரண சூழ்நிலைகள் இப்பொழுதெல்லாம் மெரும்பாலான குடும்பங்களில் காணப்படுவதே மிகவும் வேதனைக்குரிய விஷயம்.

கருத்து சுதந்துரம், பேச்சு சுதந்திரம் மறுக்கம்பட்டு வளரும் பெண்கள் திருமணமாகி செல்லும்போது சற்று அதிகமான பொறுப்புடன் காணப்படுவர். அவர்கள கூட்டுக்குடும்பங்களில் விட்டுப்கொடுத்து, பெரியவர்களிடத்தில் மரியாதையுடன் மற்றும் அனைவரையும் புரிந்துகொண்டு பெரும் பிரச்சனை வந்தாலும் அமைதியாக இருப்பார்கள். இந்த குணம் பெரும்பாலும் பெண்களுக்கு பலமாக அமைந்து விடுகிறது. இந்த பலம் குடும்பத்தினை சரியான பாதையில் வழிநடத்த பெரும் உதவியாக அமைந்தது.

ஆனால் இந்த. குணமே பெரும்பலவீனமாக பெண்கள் மிகுந்த போராட்டங்களுக்கும் உள்ளாகினர். அதை சற்றே இங்கே விரிவாக பார்ம்போம். குடும்பத்தில் அனைவரும் அப்பெண்ணை பரிந்துகொண்டால் வாழ்க்கை நிதானமாக போயின் இந்த குணம் மெரும் பலமே, மாறாக குடும்பத்தில் சில பிரச்சனைகளால் அம்பெண் தனித்து வாழவேண்டிய ஒரு சூழ்நிலை வரும்போது அவள் தனது தன்னம்பிக்கை மொத்தமாக இழந்துவிடுகிறாள்.

இந்த மாதிரியான தருணங்களில் பொதுவாக யாரையும் சார்ந்து இருக்கவேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்படுபிறாள். இந்த சூழ்நிலை பெற்றோரின் உதவி நாடி பல சமயல்களில் அவமானப்படுவாள் அல்லத தகாத நட்பு அன்பெனும்பெயரில் ஏமாற்றப்பட்டு சிந்தை கலங்கி சமுதாயத்தல் சுற்றார் மற்றும் நநட்பு வட்டாரங்களில் தனது மரியாதை இழந்து பெரும் துன்பத்திற்கு ஆளாகிறாள். ஆதலால் உரிமைகள் மறுப்கப்பட்டு தன்னம்பிக்கை வளரவி்டாம தடுத்து வளர்க்கப்படும் பெண்கள் இந்த குணங்களால் மெரும் துன்பங்களுக்கு ஆளாகின்றனர்.

ஒவ்வொரு சூழ்நிலைக்கேற்ப பெண்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதை பொறுத்தே அவர்கள் பலமும் பலவீனமும் அமைந்து விடுகிறது. குழந்தைகளுடன் வாழும் வாழ்க்கையில் பெண்கள் பலம் மற்றும் பலவீனம் பற்றி விரிவாக அடுத்தக் கட்டுரையில் பார்ப்போம்.
இவண் ஜெஜெ

Tags:

Copyright 2015 - © 2021 — Kaalaimalar | காலைமலர் . All Rights Reserved | NEWS : kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for Tamil Daily News -Kalaimalar.

error: Content is protected !!