Women’s strength and weakness Part 3 – JJ

சென்ற இரண்டு கட்டுரைகளில் பெண்களின் பரம் மற்றும் பலவீனம் ஆகியவை அவர்களின் வாழ்வை எவ்வாறெல்லாம் கொண்டு செல்கிறது என்பதனை விவரித்தேன். இந்த கட்டுரையில் காலத்தின் கட்டாயத்தால் கணவனை பிரிந்து தனியாக வாழ்ந்து தமது குழந்தைகளையும் வளர்த்து தனது சொந்த காலில் நிற்க போராட்டமே வாழ்க்கையாக வாழும் பெண்களின் நிலை அவர்களது பலம் மற்றும் பலவீனம் பற்றி சற்றே ஆழமாக விவரிக்கலாம் என்ற எண்ணத்துடன் இக்கட்டுரையை வழங்குகிறேன்.

வெகுவான காரணங்களுக்காக இளம் வயதில் தனியாக தனிமரமாக வாழும் சூழலுக்கு சில பெண்கள் தள்ளப்படுகின்றனர் அல்லது பெண்கள் தாமாகவே தனிமை வாழ்வை ஏற்றுக்கொள்கின்றனர். தனித்து வாழும் பெண்களுக்கு தங்கள் குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பும் சேர்ந்து விடுகிறது.

இந்த மாதிரியான சமயங்களில் பெண்களுக்கு பலமாக அமைவது அவர்களது அயராத உழைப்பும் அசைக்கமுடியாத தன்னம்பிக்கையும் தான் என்பது மறுக்கமுடியாத உண்மை. அவர்களது தனிமை, எதிர்காலத்தை நோக்கிய பயணம், பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் விதம், போராடி எதிர்நீச்சல் போடும் அயராத நம்பிக்கை யாவுமே பலமாக போற்றக்கூடியதே.

இவை அனைத்தும் பெற்றோர் ஆதரவும் இன்றி தனிமரமாக்கப்பட்ட பெண்கள் அனைவருக்கும் பொருந்தும். காலத்தின் கட்டாயத்தால் இல்லற வாழ்வில் இருந்து பிரிந்து தனியே வாழும் பெண்கள், பெற்றோர் உதவியுடன் இருப்பவர்கள் தன்னம்பிக்கையும், சகிப்புத்தன்மையும், மிகுந்த பலத்தைக் கொடுக்கிறது. பெற்றோரின் வழிக்காட்டுதல்கள்
இருந்தாலும் பல சமயங்களில் இபபெண்கள் தைரியமாக சுயமாக முடிவெடுக்கும் சூழ்நிலைக்குத் தள்ளப்படுவர்.

தனி ஓரு மனுஷியாக இச்சமுதாயத்தின் இழிச்சொற்களை பொறுத்து வாழ்வாதாரம் தேடி அலைந்து போராடி தான் பெற்ற குழந்தைகளை ஒரு நல்ல நிலைக்கு கொண்டு வரும் பெண், தன் பாசம், கவனம் மொத்தத்தையும் தன் குழந்தைகளுக்கே குடுத்து தனது வாழ்நாளில் பெரும்பகுதியை பெற்ற பிள்ளைகளுக்காக அர்ப்பணித்து தனக்கென ஒரு வாழ்வினையோ அல்லது தான் மட்டுமே சுகமாக இருக்கவேண்டும் என்றோ நினையாது,

தன் பிள்ளைகள் ஒரு நல்ல நிலைக்கு கொண்டு வந்து, அவர்கள் நல்ல நிலையில் இருப்தை பார்த்து சந்தோஷப்பட்டு, அவளது தியாகங்கள் வீண்போகவில்லை என்ற கர்வத்திர் சிறிதே ஆசுவாசப்படுததிக்கொள்ளலாம் என்ற நிலையில் தான் பெற்ற மக்கள் அந்த தாயை தனியே விட்டுவிட்டு வெளியூருக்கோ வெளிநாடுகளுக்கோ பணி நிமித்தம் காரணமாக சென்றுவிடும்போது அப்பெண் படும் துயரம் அப்பப்பா அதை அளவிட முடியாது.

இந்த மாதிரியான தருணங்களில் அப்பெண்ணிண் தன்னம்பிக்கை மற்றும் போராடும் குணம் பெரும்பலமாக பெரும்பாலான சமயங்களில் அமைந்து விடுகிறது. மாறாக இன்றைய காலக்கட்டத்தில் வேண்டாத சில விஷயங்கள் நடப்பதுண்டு.

எளிதாக பொய்களையும் பொய்யான மனிதர்களையும் நம்பி அன்பு மற்றும் பாசத்திற்காக ஏங்கி தனது தனிமையை போக்க யாரோ ஒருவர் சொல்வதை நம்பி தமது வாழ்க்கையே சீர்கெடுத் தருவாயில் அதிக அன்பும், வீண் பிடிவாதமும் அந்த பெண்ணின் பலவீனமாக அமைந்து அந்த பெண்ணிண் பலவீனமாக அமைந்து அந்த பெண்ணின் வாழ்க்கையை திசைமாறச் செய்து வாழ்க்கையை சீரழித்து விடுவதும் உண்டு.

ஒரு காலக்கட்டத்தில், அன்பு, பிடிவாதம், விடாமுயற்ச்சி, துணிவு, எடுத்த முயற்சியில் வெற்றி ஆகிய குணங்கள் பெரும் பலமாக தமது வாழ்வை முன்னோப்கி நேர்வழியில் கொண்டுச்செல்ல அமைந்தவை எல்லாம் பின்னொரு காலக்கட்டத்தில் பொய்யான மனிதர்களை நம்பும்போது பலமாக இருந்த அனைத்து குணங்களும் பலவீனமாக மாறிவிடுவதுதான் மறுக்கமுடியாத உண்மை.

இவண் ஜெஜெ

Tags:

Copyright 2015 - © 2021 — Kaalaimalar | காலைமலர் . All Rights Reserved | NEWS : kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for Tamil Daily News -Kalaimalar.

error: Content is protected !!