Women’s strength and weakness

இந்த தலைப்பில் எனது தொடர்கட்டுரையை எழுத ஆரம்பிக்கும் முன்னசில விஷயங்கள் பதிவிடவிரும்புகிறேன். தங்களுக்கு ஏதேனும் கருத்து வேறுபாடோ அல்லது கலந்தாய்வோ இருப்பின் jayachandrashekar2811@gmail.com என்றஎனது மின்னஞ்சல் முகவரிக்குதங்களின் மேலான கருத்துக்களை அனுப்பி வைக்கலாம் என்பதனைதெரிவித்து கொள்கிறேன்.

முன்பெல்லாம் பெண் குழந்தைகள் பேணி பாதுகாக்கப்பட்டு வளர்க்கப்பட்டனர்.ஆனால்,இன்றைய காலகட்டத்திலோ பெண்கள் ஆண்களுக்கு நிகராக இல்லை.அதற்கு மேலாகவும் வளர்க்கப்படுகிறார்கள்.ஒவ்வொரு காலகட்டத்தில் பெண்கள் எவ்வாறெல்லாம் சிந்தித்து முடிவுகள் எடுத்து அதற்கேற்றாற்போல் வாழ்கின்றனர்,பெண்கள் முந்தைய மற்றும் இன்றைய கால கட்டத்திற்கேட்ப அவர்களது பலம் மற்றும் பலவீனம் ஆகியவற்றை நான் இந்த சமுதாயத்தை நோக்கியதின் பலனாகவும் எனது சொந்த அனுபவத்தையும் இணைந்து எனது சொந்த அனுபவத்தையும் இனைந்து எனது அறிவுக்கு எட்டிய விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இக்கட்டுரையை பதிவிடுகிறேன்.

பெண்களின் பலம் மற்றும் பலவீனம் என்ற இக்கட்டுரையினை 4 பாகங்களாக பிரித்து கொள்ளலாம்.இந்த நான்கு கால கட்டத்தையும் நான்கு வெவேறு நான்கு கோணங்களில் பதிவிடுகிறேன்.முதல் பாசம் பெற்றோருடன் பெண்குழந்தைகள் இந்தவார பதிவிற்கு எடுத்து கொள்ளலாம்..

பெற்றோர் பெண்களின் பலம்

அக்காலங்களில் பெண்குழந்தைகள் தெய்வங்களாக நடமாடினார்கள் பெண்குழந்தை மிகுந்த அக்கறையோடும் பாதுகாப்புடனும் வளர்க்கப்பட்டனர்.எதிர்காலத்தில் அவர்கள் ஒரு குடும்பத்தை வழி நடத்தி செல்லும் அளவே மட்டும் கற்று கொடுக்கபட்டனர். பெண்களுக்கான உரிமைகள் பெரிதாக எடுத்து கொள்ளப்படவில்லை.பெண்களும் இருப்பதை வைத்து சந்தோஷமாகவே இருந்தனர். இந்த போக்கு பிற்காலத்தில் அவர்களை எப்படியெல்லாம் அடிமைப்படுத்தப்பட்டனர் என்பதனை அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்.அக்கால குழந்தைகளுக்கு பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம் மறுக்க பட்டன.இவ்விதமாக வளர்க்கப்பட்ட

பெண்குழந்தைகள் மிகுந்த பாதுகாப்புடன் தமது கடமைகளை மட்டும் அறிந்து வளர்ந்தன என்பது பெரும் பலமே ஆகினும்,அதில் நிறைய பலவீனப்படுத்தப்பட்டனர் என்பது தான் உண்மை.அக்கால பெண்குழந்தைகள் பெற்றோரிடம் இருந்து சகிப்புத்தன்மை,பொறுப்புணர்வு ஆகியவற்றை கற்று கொண்டது மிக பெரிய பலம்.விட்டு கொடுத்தல் பெரியவர்களுக்கு கீழ்ப்படிதல், தமது இல்லம் தாண்டி எதுவும் யோசிக்காமல் இருத்தல் ஆகியவை பெண்கள் குடும்பத்தை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள பெரும் பலமாக அமைந்தது மறுக்க முடியாத உண்மை. ஆனால் இந்த அனைத்து குணங்களும் பிற்காலத்தில் பெண்களை அடிமை படுத்தின என்பது கசப்பான உண்மை இந்த சகிப்பு தன்மை, பொறுப்புணர்வு,கீழ்ப்படிதல்,விட்டுக்கொடுத்தல் ஆகிய நற்குணங்களே பெண்களுக்கு மிக பெரிய பலவீனமாகவும் அமைந்து விட்டது.

இப்போதெல்லாம் பெண்குழந்தைகள்ஆண்குழந்தைகளை போலவேவளர்க்கப்படுகின்றனர்.அதிலும் ஒற்றைபெண் இருக்கும் வீடுகளில் அவள்ராஜகுமாரியாக வளர்கிறாள்.இப்படிவளர்க்கப்படும் பெண்குழந்தைகளுக்குபலம் என்பது துளியேனும் இருக்காதுஎன்பது பலமே ஆகினும்,அதுவேபெரும்பாலான சமயங்களில்பலவீனமாகவும்அமைகிறது.

சுதந்திரமாக சிந்தித்தல்,செயல்படுதல், விரும்பியபாடம் படித்தல், விரும்பியது யாவும்இக்கால சிறுவயதிலேயே முடிவெடுத்துசெயல்படுத்துதல், சுயமாக சம்பாதித்தல்இக்கால பெண்களின் பலம் என்பதுமறுக்க முடியாதது. இருப்பினும் இந்தகுணங்களால் எங்கேயும் அனுசரித்துஅரவணைத்து சகித்து செல்வதுபோன்ற குணங்கள் மங்கிவிடுவதுஇயற்கையே,இதுவேபலவீனங்களாகவும் பார்க்கபடவேண்டும்.

பெற்றோரிடம் வளரும் போதுஇத்தகைய பலங்களையும்பலவீனங்களையும் சந்தித்து வளரும்மகள்கள்,பின்னர் திருமண வயது வரும்தருவாயிலும்,திருமணதிற்கு பின்அவர்களின் இந்நாளைய பலம்பலவீனம் எப்படி தன் தாக்கத்தைஏற்படுத்துகின்றது என்பதனை அடுத்தகட்டுரையில் விரிவாக பார்க்கலாம் .

இவண் ஜெ ஜெ

Tags:

Copyright 2015 - © 2021 — Kaalaimalar | காலைமலர் . All Rights Reserved | NEWS : kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for Tamil Daily News -Kalaimalar.

error: Content is protected !!