பெரம்பலூர் அருகே வேலை கிடைக்காத விரக்தியில் குடும்பத் தலைவர் எலி மருந்து தின்று தற்கொலை!

schedule
2021-01-10 | 03:34h
update
2021-01-10 | 03:34h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Worker commits suicide by consuming rat Poison near Perambalur

பெரம்பலூர் அருகே உள்ளள சிறுவாச்சூர் கிராமத்தை சேர்ந்தவர் கந்தசாமி மகன் தங்கவேல் (வயது 46) கூலி வேலை செய்து வருகிறார். அவருக்கு சுந்தரி என்ற மனைவியும் மூன்று பெண் மகள்கள். மூத்த மகள் மகாலட்சுமியை (வயது 23) தெரணி கிராமத்தை சேர்ந்த ஆனந்தராஜ் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்து விட்டார்.

Advertisement

இந்நிலையில் கொரோனா காலத்தில் சரிவர வேலை எதுவும் கிடைக்காததால் விரக்தியில் இருந்தார் தங்கவேல். மேலும் அவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்த நிலையில், கடந்த ஜன. 07-ம் தேதி இரவு எலி பேஸ்ட் சாப்பிட்டு விட்டதாகவும் உடன் பெரம்பலூர் அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து வந்து சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு பொது மருத்துவமனை அழைத்து சென்று சிகிச்சையில் இருந்த அவர் சிகிச்சை பலனின்றி 8ம் தேதி இரவு இறந்துவிட்டார். இது சம்பந்தமாக தங்கவேலின் மூத்த மகள் மகாலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் பெரம்பலூர் காவல் உதவி ஆய்வாளர் அண்ணாதுரை வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
10.04.2026 - 21:40:01
Privacy-Data & cookie usage: