Worker killed by electric shock near Perambalur!

பெரம்பலூர் மாவட்டம், உடும்பியம் கிராமத்தில், தனியாருக்கு சொந்தமான சர்க்கரை ஆலை இயங்கி வருகிறது. அதில், கேரளாவை சேர்ந்த தனியார் ஒப்பந்த நிறுவனத்தில், கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகே உள்ள பெலாந்துறை கிராமத்தை சேர்ந்த ஜெயப்பெருமாள் மகன் ஜெயசூர்யா (26) வெல்டராக பணி புரிந்து வந்தார்.

இன்று மாலை சுமார் 4 மணி அளவில், சர்க்கரை தயாரிக்கும் பாய்லரின் மேற்புறம் வெல்டிங் செய்த போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி பலியானர். இது குறித்து தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற அரும்பாவூர் போலீசார், இறந்த ஜெயசூர்யாவின் உடலை மீட்டு, உடற்கூறு ஆய்விற்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இறந்துள்ளார், பிரேதம் பெரம்பலூர் அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது. தகவல் அறிந்த அரும்பாவூர் காவல் நிலைய போலீசார் சம்பவ இடம் சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!