வேலை வழங்க கோரி தொழிலாளர்கள் பெரம்பலூர் அருகே வட்டார வளர்ச்சி அலுவலகம் முற்றுகை

schedule
2019-05-10 | 12:37h
update
2019-05-10 | 15:54h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Workers demanding job offer Sector of Block Development Office Siege near Perambalur

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை ஒன்றியம், பெரியம்மாபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட வெங்கனூர் கிராமத்தை சேர்ந்த பொது மக்களுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம் [ Mahatma Gandhi National Rural Employment Guarantee Act] () 100 நாள் வேலை திட்டத்தில் வேலை வழங்குவதில்லை என்றும், சுற்று வட்டார பகுதியிலுள்ள கிராமங்களில் எவ்வித பாகுபாடுமின்றி வேலை வழங்கப்படும் நிலையில் தங்கள் கிராமம் மட்டும் புறக்கணிக்கப்படுவதாக குற்றம் சாட்டியும், 100க்கும் மேற்ப்பட்ட பெண்கள் உள்ளிட்ட பொது மக்கள் இன்று வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement

இதனால் வேப்பந்தட்டை ஒன்றிய அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்களிடம் அரசு அதிகாரிகள் மற்றும் அரும்பாவூர் போலீசார் சமாதான பேச்சு வார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி போராட்டத்தை கைவிட செய்தனர். இது தொடர்பாக மனுவை அதிகாரிகள் பெற்றுக் கொண்டதால், கலைந்து சென்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
09.04.2026 - 11:34:25
Privacy-Data & cookie usage: