Workers demonstrate in Perambalur demanding execution of election manifesto!

பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில், இன்று காலை, தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் தமிழக முதல்வருக்கு, கலெக்டர் மூலமாக மனு அளிக்கும் போராட்டம் நடத்தினர்.

மின்வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களை அடையாளம் கண்டு நிரந்தர படுத்த வேண்டும், அவுட்சோர்சிங் முறையை கைவிட வேண்டும், காலி பணியிடங்களை நிரப்பிட வேண்டும், ஒப்பந்த ஊழியர்களுக்கு சமூக பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும், 10 ஆண்டுகளுக்கு மேல் பொதுத் துறையில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரப்படுத்துவோம் என்ற திமுக அரசின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில செயலாளர் அகஸ்டின் தலைமையில் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று காலை போராட்டம் நடத்திய பணியாளர்கள், பெரம்பலூர் கலெக்டரிடம் மனு கொடுத்து கலைந்து சென்றனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!