World AIDS Day: Blood donation camp at Ramanathapuram Government Hospital

ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு ரத்ததான முகாம் நடந்தது.

ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் உலக எய்ட்ஸ் தின்த்தை முன்னிட்டு ராமநாதபுரம் ஜூனியர் ரெட்கிராஸ், தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம், ராமநாதபுரம் நகர் அரிமா சங்கம் இணைந்து ரத்ததான முகாம் நடத்தினர்.

ரத்ததான முகாமை கலெக்டர் நடராஜன் துவக்கி வைத்தார். ஜூனியர் ரெட்கிராஸ் கன்வீனர் ரமேஷ், துணை தலைவர் ஜெயகுமார் மாவட்ட கல்வி அலுவலர் முத்துச்சாமி, அரிமா சங்க தலைவர் ராஜா, பொது செயலாளர் ராமகிருஷ்ணன், செயலாளர் இருதயராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.

அரசு மருத்துவமனை ரத்தவங்கி டாக்டர் விநாயகமுர்த்தி மற்றும் குழுவினர் 35 பேரிடம் ரத்தம் சேகரித்தனர். முகாம் ஏற்பாடுகளை ஆசிரியர் அய்யப்பன் செய்திருந்தார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!