பெரம்பலூர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில் உலக சுற்றுச்சூழல் தினவிழா

schedule
2018-06-05 | 17:14h
update
2026-09-02 | 21:11h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

World Environment Day Celebration on behalf of the Perambalur District Legal Services Commission

பெரம்பலூர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில் பெரம்பலூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உலக சுற்றுச் சூழல் தினவிழா இன்று பெரம்பலூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி எஸ்.பாலராஜமாணிக்கம் தலைமையில், நீதிமன்றங்களின் சுற்றுச்சூழல்களை பாதுகாக்கும் வகையிலும் பொதுமக்களிடையெ சுற்றுச்சூழல்களின் அவசியத்தை தெரிவிக்கும் விதமாக வனத்துறை சார்பாக வழங்கப்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டது.

Advertisement

இந்நிகழ்ச்சியில், மகிளா நீதிமன்ற அமர்வு நீதிபதி திரு.என்.விஜயகாந்த், தலைமை நீதித்துறை நடுவர் முரளிதரன், சார்பு நீதிபதிகள் வினோதா, ஸ்ரீஜா, மற்றும் நீதித்துறை நடுவர்கள் அசோக் பிரசாத், கெ.மோகனபிரியா, அரசு வர்க்கறிஞர் பாலமுருகன் மற்றும் வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் சுந்தரராஜன், அட்வகேட்ஸ் அசோசியசன் சங்க செயலாளர் எஸ்.சுப்ரமணியன்,

வழக்கறிஞர்கள் எஸ்.மணிவண்ணன், என்.சீனிவாசன், என்.புகழேந்தி, திரு.ஜி. பாபு, எ.அருணன், எம்.வீரமுத்து, ந.கருணாநிதி, டி. பெரியசாமி, திரு.கே.திருநாவுக்கரசு மற்றும்

பெரம்பலூர் மாவட்ட உதவி வன அலுவலர் இளங்கோ, வனச்சரக அலுவலர்கள் ரவிகிருஷ்ணன், தங்கராஜ், வனக் காவலர் தங்கராஜ், வனக் காப்பாளர்கள் பாலசுப்ரமணியன், பொன்னுசாமி, வனவர் சுப்ரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
02.09.2026 - 21:12:05
Privacy-Data & cookie usage: