பெரம்பலூர், சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில் உலக மனித உரிமைகள் தினம் !

schedule
2019-12-11 | 05:14h
update
2019-12-11 | 05:14h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

World Human Rights Day was held at Perambalur Court on behalf of the Legal Aid Commission.

பெரம்பலூர் நீதிமன்றத்தில், உலக மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு, சட்ட உதவி மற்றும் விழிப்புணர்வு முகாம் சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், பொறுப்பு முதன்மை மாவட்ட நீதிபதி எஸ்.மலர்விழி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு பெரம்பலூர் மாவட்ட நிரந்தர மக்கள் நீதிமன்ற தலைவர் மற்றும் மாவட்ட நீதிபதி ஜி.கருணாநிதி, முன்னிலையில் நடைபெற்றது. சார்பு நீதிபதி எம்.வினோதா, மாவட்ட உரிமையியல் நீதிபதி ரவிச்சந்திரன், குற்றவியல் நீதித்துறை நடுவர்கள் அசோக்பிரசாத், மற்றும் கருப்புசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். முகாமில் முதன்மை மாவட்ட நீதிபதி பேசியதாவது: அனைத்து தரப்பு மக்களையும் சட்டம் சமமாக தான் பார்க்கிறது. பொதுமக்கள் பணியாளர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது மனித உரிமை மீறல்கள் நிகழும் போது இதை தடுத்திட மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு, துணை நின்று தக்கள சட்ட உதவிகளை வழங்கி காத்திடும் என்று தெரிவித்தார். முகாமில், அட்வகேட் அசோசியேசன் செயலாளர் வழக்கறிஞர் இளவரசன், பெரியசாமி, செல்வி, சந்தானலட்சுமி, பேரா.முருகையன், காமராஜ், அருணன், ஆர்.மணிவண்ணன், நீதிமன்ற பணியாளர்கள், மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். முகாமிற்கான ஏற்பாடுகளை சட்டப்பணிகள் ஆணைக்குழு நிர்வாக அலுவலர் வெள்ளைச்சாமி செய்திருந்தார்.

Advertisement

Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
11.07.2026 - 16:30:36
Privacy-Data & cookie usage: