வேப்பந்தட்டை அரசு கல்லூரியில் உலக யோகா தினம்

schedule
2017-06-22 | 09:56h
update
2026-05-01 | 14:36h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

World Yoga Day at Veppanthattai Government Arts and Science College

பெரம்பலூர் அருகேயுள்ள வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உலக யோகா தினம் இன்று கொண்டாடப்பட்டது.

உடலையும்,மனதையும் சீராக வைத்துக்கொள்ளும் வகையில் ஆண்டு தோறும் ஜீன் 21-ந்தேதி உலக யோகா தினமாக அறிவித்து அந்நாளில் யோகா பற்றிய பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைப்பெற்று வருகின்றது.

Advertisement

இந்நிலையில் இன்று வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உலக யோகா தின நிகழ்ச்சி நடைப்பெற்றது.கல்லூரியின் முதல்வர் மணிமேகலை தலைமையில் நடைப்பெற்ற இந்நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு யோகா செயல்முறை பயிற்சி அளிக்கப்பட்டது.

இந்த செயல்முறை பயிற்சியினை கல்லூரியின் பேராசிரியர் மூர்த்தி மாணவர்களுக்கு விளக்கினார்.இந்நிகழ்ச்சியில் நாட்டுநலபணித்திட்ட அலுவலர்முனைவர் நீலமேகம், பேராசிரியர் சகாயம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
01.05.2026 - 14:37:02
Privacy-Data & cookie usage: