உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பெரம்பலூரில், யோகா பயிற்சி

schedule
2019-10-10 | 16:59h
update
2019-10-10 | 17:01h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Yoga Practice for Physical Teachers at Perambalur

பெரம்பலூர் அறிவுத்திருக்கோயிலில் பள்ளிக்கல்வித்துறை மற்றும் உலக சமுதாய சேவா சங்கம் சார்பில் உடற்கல்வி இயக்குனர் மற்றும் ஆசிரியர்களுக்கான 3 நாட்கள் நடைபெறும் மனவளக்கலை யோகா பயிற்சி இன்று தொடங்கியது.

Advertisement

பெரம்பலூர் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி தலைமை வகித்து பேசுகையில் இங்கு பயிற்சி பெறும் உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க உள்ளனர். ஆசிரியர்கள், மாணவ மாணவிகளுக்கு உடல் மற்றும் மனதை வளப்படுத்துவதே இப்பயிற்சி முகாமில் நோக்கமாகும் என்றார்.

உடற்கல்வி ஆய்வாளர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். மனவளக்கலை மன்ற ஒருங்கிணைப்பாளர் சுந்தர் யோகா பயிற்சியின் பயன் குறித்தும், பொருளாளர் கருப்பைய்யா தியானம் மற்றும் மூச்சு பயிற்சி குறித்து விரிவாக எடுத்துரைத்தனர்,

துனை பேராசிரியர்கள் மாலா, வெற்றிச்செல்வி ஆகியோர் யோகா பயிற்சி செய்முறை செய்து காட்டினர். இந்நிகழ்ச்சியில் துணை பேராசிரியர்கள் கீதா, அனிதா, செஞ்சிலுவை சங்க கவுரவ செயலாளர் ஜெயராமன் மற்றும் உடற்கல்வி இயக்குனர் மற்றும் ஆசிரியர்கள் 60 பேர் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
01.09.2026 - 05:33:17
Privacy-Data & cookie usage: