You can apply online to join the first year course of Polytechnic: Perambalur Collector V. Shantha Information.

பெரம்பலூர் கலெக்டர் வே.சாந்தா விடுத்துள்ள தகவல்:

2020-2021-ஆம் கல்வியாண்டிற்கு அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளில் முதலாமாண்டு முழுநேரம் தொழில்பயிற்சியுடன் கூடிய பட்டயப் படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு www.tngptc.in என்ற இணையதளம் மூலமாக இப்பயிலகத்தில் 20.07.2020 முதல் 04.08.2020 வரை நடைபெற்று வருகிறது.

விண்ணப்ப கட்டணம் ரூ.150- செலுத்தவேண்டும். (மாணவர்கள் பதிவு கட்டணத்தை Credit Card, Debit Card மற்றும் Net Banking வாயிலாக செலுத்தலாம்). தமிழகத்தை சேர்ந்த எஸ்.சி., எஸ்.டி., மாணவர்கள் தங்களது சுய சான்றொப்பமிட்ட சாதி சான்றிதழ் நகல்களை சமர்ப்பித்து இலவசமாக இணையதளம் மூலமாக 04.08.2020 தேதிக்குள் விண்ணப்பத்து கொள்ளலாம்.

இதற்கான கல்வித் தகுதி 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ – மாணவியர்களுக்கான முதலாமாண்டு பட்டயச் சேர்க்கை (Diploma First Year admission – 2020-2021) அமைப்பியல் துறை (Civil), இயந்திரவியல் துறை (Mechanical), மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் துறை (ECE), மின்னியல் மற்றும் மின்னணுவியல் (EEE), கணிப்பொறியியல் துறை (Computer) பாடப்பிரிவுகளுக்கு கலந்தாய்வு முலமாக சேர்க்கை நடைபெற உள்ளது. மாணவ – மாணவியர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம்.

இக்கல்லூரியில் அரசால் நிர்ணயிக்கப்பட்ட குறைந்த பட்ச கல்விக்கட்டணம் மட்டுமே பெறப்படும். தரமான கல்வி மற்றும் அனுபவமிக்க தகுதி வாய்ந்த ஆசிரியர்களால் நடத்தப்படுகிறது. Smart Class வசதி மற்றும் நல்ல கட்மைப்புடன் கூடிய ஆய்வக வசதி உள்ளது. கடந்த 2019-2020-ஆம் கல்வியாண்டில் கல்லூரி வளாகம் (Campus Interview) தோ;வு மூலமாக சுமார் 150-க்கு மேற்பட்ட மாணவ -மாணவியர்களுக்கு பல்வேறு நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்று வழங்கப்பட்டுள்ளது.

கல்லூரிக்கு அருகாமையில் மாணவியர்கள் தங்கி பயில அரசு பிற்படுத்தப்பட்டோர் நல விடுதி இலவசமாக செயல்பட்டு வருகிறது. மாணவர்களுக்கு கல்லூரி வளாகத்தினுள் குறைந்த கட்டணத்தில் தனி விடுதியில் உள்ளது. இக்கல்லூரியில் மாணவர்களுக்கு அரசால் இலவச பேருந்து பயண அட்டை, இலவச மடிக்கணினி, அரசு கல்வி உதவித்தொகை போன்ற நலத்திட்டங்கள் மூலம் பயன்பெறலாம் என்றும், மேலும் விவரங்களுக்கு 04328 – 243200 என்ற தொலைபேசி எண்ணை தொடர்புகொண்டு பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!