You can light your lighthouse: Kamal Hassan in Ramanathapuram

உங்கள் வீட்டு குத்துவிளக்கு நான் குத்துவிளக்கை விளக்கேற்றி பாதுகாப்பது உங்கள்பொறுப்பு, என, புதிய கட்சி தொடங்கிய நடிகர்கமல்ஹாசன் பேசினார்.

ராமேஸ்வரத்தில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் நினைவிடத்திலிருந்து நடிகர் கமல்ஹாசன் அரசியல் பயணத்தை தொடங்கினார். புதிதாக தொடங்க உள்ள கட்சியின் பெயர், சின்னம், குறி்த்து மதுரையில் பொதுக்கூட்டத்தில் அறிவிப்பேன் என அரசியல் பயணத்தை ராமேஸ்வரம் மண்ணில் துவங்கிய கமல்ஹாசன் வழிநெடுக தனது ரசிகர் மன்றம் மற்றும் மக்களை சந்தித்து அரசியல் ஆதரவு திரட்டினார். மீனவர்களை சந்தித்தபோது எனக்கு சால்வை அணிவிக்க தெரியாது எனது கைகள்தான் சால்வை என இரு கைகளையும் விரிந்து திறந்து மீனவர்களை கட்டி தழுவி ஆரவணைத்தார். மீனவர்கள் நெஞ்சுருகினர்.

இதனை தொடர்ந்து ராமநாதபுரம் அரண்மனையில்நடந்த முதல் பொது கக்ஷட்டத்தில் பிற்பகல் சரியாக 1 மணிக்கு மேடையேறிய நடிகர் கமல்ஹாசன் மேடையில் இருந்து மக்களை சந்தித்து ஆரவாரம் செய்து பின் பேசுகையில், நான் 45 ஆண்டுகளுக்கு பின் இங்கு வருகிறேன். இங்கு என் சித்தப்பா வீடு இருந்தது. தற்போது இந்த ஊரே எனது வீடுதான் அந்தளவு மக்கள் கூட்டம் அதிகமாக இருந்து வரவேற்றுள்ளனர்.

இந்த அன்பு வெள்ளத்தில் நீந்தி வர மிகுந்த ஆசை. இதை நான் நழுவ விடமாட்டேன். இங்குள்ள கூட்டத்தை பார்த்தால் நான் மதுரையில் அறிவிக்க வேண்டிய விஷயத்தை இங்கு தெரிவிக்கலாம் போல் உள்ளது. நான் சினிமா நட்சத்திரம் அல்ல. உங்கள் வீ்ட்டு குது்துவிளக்கு. நீங்கள்தான் குத்துவிளக்கை விளக்கேற்றி பாதுகாக்கவேண்டும். அது உங்களுடைய பொறுப்பு.இவ்வாறு நடிகர் கமல்ஹாசன் பேசினார்.

கூட்டத்தில் ராமநாதபுரம் மாவட்ட இளைஞரணி செயலாளர் ரஞ்சித், மாவட்ட செயலாளர் மகிகிருஷ்ணன், மாவட்ட அமைப்பாளர் சரவணன், துணை அமைப்பாளர் நிவாஷ்சங்கர், மாவட்ட நிர்வாகி சாகுல்ஹமீது, இப்ராகிம், பாஸ்கர், பாவா, அப்சல் உட்பட பலர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!