You will actively participate in the work of verification of voter list in Perambalur district! District Secretary Kunnam C. Rajendran Report!


பெரம்பலூர் மாவட்ட திமுக செயலாளர் சி. இராஜேந்திரன் விடுத்துள்ள அறிக்கை:

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர்,குன்னம் இரண்டு சட்டமன்ற தொகுதிகளிலும், 2023-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதியினை தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த சுருக்க பணிகள் நவம்பர் 09- ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது.மேலும் 2023-ஆம் ஆண்டு ஜனவரி -01-ஆம் தேதியன்று 18 வயது பூர்த்தியடையும் ஒவ்வொருவரும் இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாமல் இருந்தால் தற்போது புதிதாக சேர்ப்பதற்கு
படிவம் 6, ஆதார் எண் சேர்ப்பதற்கு படிவம் 6 பி,
பெயர் நீக்கம் செய்வதற்கு படிவம் 7, எழுத்துப்பிழைகள், முகவரி மாற்றம் செய்வதற்கும், வாக்காளர் அடையாள அட்டை நகல் கேட்க விரும்புவதற்கு படிவம்
8, ஆகியவற்றை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட தேதிகளில் அனைத்து வாக்குச்சாவடி மையங்கள் அல்லது வட்டாட்சியர் அலுவலகங்களில் வழங்கலாம்.
12 -11- 2022 (சனிக்கிழமை) –
13 -11- 2022 (ஞாயிற்றுக் கிழமை)-
26- 11- 2022 (சனிக்கிழமை) மற்றும் 27 -11-2022 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நான்கு நாட்களில் நிர்ணயிக்கப்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இந்த முகாம்களில் பெறப்படும் அனைத்து வகையான படிவங்களும் பரிசீலனை செய்யப்பட்டு 05.01.2022 அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.
இந்த நாட்களில் விடுபட்ட வாக்காளர்களும், இடம் மாறிய வாக்காளர்களும் 01-01-2023 அன்று 18- வயது நிரம்பக்கூடிய புதிய வாக்காளர்களும் தங்கள் பெயர்களை சேர்க்க, நீக்க, திருத்தங்கள் மேற்கொள்வதற்கான படிவங்களை பெற்று பூர்த்தி செய்து, அந்தப் படிவங்களை அந்தந்த முகாம்களில் கொடுக்க வேண்டும்.
இதனடிப்படையில் 2023-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி 18 வயது நிறைந்தவர்களின் பெயர்களையும், வாக்காளர் பட்டியலில் இதுவரை இடம் பெறாத பெயர்களையும், புதிதாக குடிபெயர்ந்து உள்ள வாக்காளர்களின் பெயர்களையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கவும், தொகுதியில் இருந்து இடம் பெயர்ந்தவர்கள் மற்றும் இறந்தவர்கள் பெயர்களை தற்போதுள்ள பட்டியலில் இருந்து நீக்கவும் தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள மேற்கண்ட அட்டவணையின்படி சிறப்பு முகாம்கள் நடைபெற விருக்கும் நாட்களில் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழகச்செயலாளர்கள், கிளைக்கழகச்செயலளர்கள், வார்டு கழக செயலாளர்கள் மற்றும் வாக்குச்சாவடி நிலை முகவர்கள்(BLA-2) ஆகியோர் தங்களை முழுமையாக ஈடுபடுத்திட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த பணிகள் குறித்து கழக நிர்வாகிகள் மாவட்ட கழக அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டுகிறன், என் தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!