பெரம்பலூரில் பயங்கர ஆயுதங்களுடன் வாலிபரை வெட்டி கொல்ல முயன்ற 4 பேர் கொண்ட கும்பலை கைது செய்த போலீசார்!

schedule
2021-08-07 | 08:31h
update
2021-08-07 | 08:31h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Young men with weapons who tried to kill the police who arrested the gang with 4 people in Perambalur!

பெரம்பலூர் வடக்கு மாதவி சாலையில் நேற்று மாலை புல்லட்டில் சென்று கொண்டிருந்த வாலிபரை 4 பேர் கொண்ட கும்பல் கொலை வெறியுடன், சரமாரியாக வெட்டியது. இதில், சூனி கண்ணனுக்கு காது கிழிந்தது. தலை, உடலில் பல்வேறு அரிவாள் வெட்டுக்கள் விழுந்ததில் ரத்தகாயத்தில் கிடந்தார். இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் சிதறி ஓடினர். இந்நிலையில் காவல் நிலையம் ஒரு சில 100 மீட்டர்களுக்குள் இருந்தால் தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வெட்டு பட்டவரை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் காயமடைந்த வாலிபர் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் சிலோன் காலனி பகுியை சேர்ந்த சூனி கண்ணன் ( ), என்பதும், இவர் மீது ஏற்கனவே, காவல் நிலையத்தில் கஞ்சா விற்பனை மற்றும் அடி தடி வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.

Advertisement

போலீசார் தீவிர வேட்டை நடத்தியதில் , சூனி கண்ணனை பயங்கர ஆயுதங்களுடன் கொல்ல முயன்றது, பெரம்பலூர் ஆலம்பாடி சாலையில் சமத்துவபுரத்தை சேர்ந்த முருகன் மகன் நவீன் (21) ஆட்டோ டிரைவர், குரும்பலூர் பாளையத்தை சேர்ந்த ஜேசுதாஸ் மகன் சாலமன் செனட் (22), பி.ஏ பட்டதாரி, துறைமங்கலத்தை சேர்ந்த சார்லஸ் மகன் வினோத் (26), கல்பாடி வடக்குத் தெருவை சேர்ந்த அண்ணாதுரை மகன் கமலஹாசன் (26) உள்ளிட்ட 4 பேரை போலீசார் பெரம்பலூரை விட்டு தப்பிக்க முயன்றவர்களை வளைத்து பிடித்து கைது செய்தனர்., முதற்கட்ட விசாரணையில், முன்விரோதம் காரணமாக கொல்ல முயன்றுள்ளனர். என்னது தெரியவந்தது. மேலும், இது குறித்து தீவிர விசாரணையை போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில் நடத்தி வருகின்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
04.09.2026 - 19:52:57
Privacy-Data & cookie usage: