பெரம்பலூர் அருகே தூக்கில் இளம்பெண் சடலமாக மீட்பு : போலீசார் விசாரணை

schedule
2017-08-28 | 20:20h
update
2026-07-03 | 11:51h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

young woman found dead near the hanging near in perambalur : police enquiry

பெரம்பலூர் அருகே இளம் பெண் ஒருவர் தூக்கில் சடலமாக மீட்பு: கொலையா? தற்கொலையா? போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பெரம்பலூர் மாவட்டம், நாரணமங்களம் கிராமத்தை சேர்ந்தவர்கள் முருகையன், சுதா(வயது 25), இவர்களுக்கு திருமணமாகி 6 வருடங்கள் இரண்டு மாதங்கள் ஆகிறது.

Advertisement

ஜெகன், நிவிதா என இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கடந்த 4 வருடங்களாக முருகையன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை சுதா தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டு, போலீசாரால் பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இதனையறிந்த சுதாவின் பெற்றோர் உள்ளிட்ட உறவினர்கள் 100க்கு ம் மேற்ப்பட்டோர், சுதாவின் சாவில் மர்மம் இருப்பதாகவும், அவரது உயிரிழப்பிற்கு எதிர் வீட்டில் வசிக்கும் முத்துசாமி மகன் விஜயன்(18) தான் காரணம் என்றும் அவர் மீது நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தியும் பாடாலூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு புகார் மனு அளித்தனர்.

மனுவை பெற்று கொண்ட இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதனையடுத்து சுதாவின் பெற்றோர் உள்ளிட்ட உறவினர்கள் காவல் நிலைத்திலிருந்து கலைந்து சென்றனர்.

வழக்குப் பதிவு செய்த போலீசார் விஜயனை பிடிக்க தீவிரமாக தேடி வருகின்றனர்.

இளம் பெண் ஒருவர் தூங்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப் பட்ட சம்பவம் நாரணமங்கலம் கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
03.07.2026 - 11:51:19
Privacy-Data & cookie usage: