பெரம்பலூர் அருகே லாரி

மோட்டார்சைக்கிள் மோதல்; வாலிபர் பலி!

schedule
2021-03-05 | 06:56h
update
2021-03-05 | 06:56h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Young man Kills; Lorry-motorcycle collision near Perambalur!

பெரம்பலூர் அருகே லாரியும், மோட்டார் சைக்கிளும் மோதிக் கொண்ட விபத்தில் வாலிபர் பலியானர்.

Advertisement

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம் அன்னமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் (வயது சுமார் 65) இவரது மகன் ராஜா (வயது 37). இவர் நேற்றிரவு பெரம்பலூர் அருகே உள்ள தண்ணீர்பந்தல் – செஞ்சேரி சுற்றுச்சாலையில் மோட்டார்சைக்களில் வந்து கொண்டு இருந்தார். அப்போது மோட்டார்சைக்களில் வடக்கு மாதவி பிரிவு சாலை அருகே வந்த போது திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் இருந்து புதுச்சேரியை நோக்கி சென்ற சரக்கு லாரியும் மோதிக் கொண்டது. இதில் ராஜாவிற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராஜாவின் உடலை மீட்டு, உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் செந்தமிழ்செல்வி வழக்குப் பதிவு செய்து லாரி ஓட்டுனர் தர்மராஜ் (வயது 50) கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
16.06.2026 - 12:35:40
Privacy-Data & cookie usage: