வேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகை : இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் : பெரம்பலூர் ஆட்சியர்

schedule
2018-04-04 | 16:07h
update
2018-04-04 | 16:11h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Youth can apply for unemployment allowance: Perambalur District Collector

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் ஆ.அழகிரிசாமி விடுத்துள்ள தகவல் :

பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி பயின்று தேர்ச்சியடையாதவர்கள் முதல் பட்டதாரிகள் வரை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து தொடர்ந்து புதுப்பித்தல் செய்து ஐந்து வருடங்களுக்கு மேலாக வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் பதிவுதாரர்களுக்கு, வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் விண்ணப்பப் படிவங்கள் வழங்கப்படுகிறது.

Advertisement

அதன்படி, இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் தங்களது கல்வித் தகுதியை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஐந்து வருடங்கள் முடிவடைந்தவராக இருக்க வேண்டும்.

அதாவது 31.03.2013க்கு முன்னர் பதிவு செய்தவராக இருக்க வேண்டும். மனுதாரர் தனது வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டையை தவறாது தொடர்ந்து புதுப்பித்தல் செய்திருக்க வேண்டும்.

31.03.2013 அன்று தாழ்த்தப்பட்ட, பழங்குடியினத்தவர்கள்; 45 வயதைக் கடந்தவராக இருத்தல் கூடாது. மற்ற வகுப்பினர்கள் அதே போன்று 40 வயதைக் கடந்தவராக இருத்தல் கூடாது.

மனுதாரருடைய குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரு.50,000- க்கு மிகாமல் இருக்க வேண்டும். மனுதாரர் எந்த ஒரு கல்வி நிறுவனத்திலும் சேர்ந்து கல்வி பயிலும் மாணவ – மாணவியராக இருத்தல் கூடாது. ஆயினும் தொலைதூரக் கல்வி பயிலுபவராக இருக்கலாம். மனுதாரர் சுயமாக தொழில் செய்பவராகவோ, சுயமாக சம்பாத்தியம் செய்பவராகவோ இருத்தல் கூடாது.

மேற்படி தகுதியுடைய மனுதாரர்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவம் 31.05.2018 வரை அலுவலக வேலை நாட்களில் காலை 10.00-மணி முதல் மதியம் 1.00-மணி வரை பெறப்படும்.

மனுதாரர் விண்ணப்பப்படிவம் பெற்றுக் கொள்வதற்கு கீழ்க்காணும் அசல் ஆவணங்களுடன் வருகை தர வேண்டும்.

அனைத்து கல்வி சான்றிதழ்கள், மாற்றுச் சான்றிதழ் புதுப்பிக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை, குடும்ப அடையாள அட்டை மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றுடன் வரவேண்டும். ஏற்கனவே பயனடைந்தவர்கள் விண்ணப்பிக்க தேவையில்லை, என தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
30.04.2026 - 02:33:39
Privacy-Data & cookie usage: