பெரம்பலூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் பலி!

schedule
2023-09-19 | 07:25h
update
2023-09-19 | 07:45h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Youth dies after being hit by an unidentified vehicle near Perambalur!

பெரம்பலூர் அருகே உள்ள கோனேரிப்பாளையம் கிராமத்தில், நேற்றிரவு சுமார் 11.30 மணி அளவில், பெரம்பலூர் – ஆத்தூர் ரோட்டில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் 35 வயது மதிக்க தக்க வாலிபர் உடலில் பலத்த காயங்களுடன் ஒருவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்து கிடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பெரம்பலூர் போலீசார் உடலை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்கு அனுப்பி வைத்தனர்.

Advertisement

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், வாலிபர் மீது மோதிவிட்டு நிற்காமல் தப்பித்து சென்ற அடையாளம் தெரியாத வாகனத்தை அடையாளம் காணும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்னர். மேலும், வாலிபர் யார். அவர் எந்த ஊர், ஏன் அப்பகுதிக்கு வந்தார் என பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அப்பகுதியில் உள்ள ரோட்டு பகுதியில் உள்ள அனைத்து சிசிடிவி கேமராக்களின் காட்சிப் பதிவுகளையும் வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நள்ளிரவு இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

விளம்பரம்:

பதிவு இலவசம்,

ரூ. 2 செலுத்தி வரும் 144 நாட்களுக்கு வரன் தேடுங்கள் https://dsmatrimony.net/

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
02.09.2026 - 00:55:15
Privacy-Data & cookie usage: