பெரம்பலூர் அருகே பிராந்தியில் பூச்சி மருந்து கலந்து குடித்த வாலிபர் சாவு! போலீசார் விசாரணை!!

schedule
2020-05-23 | 18:30h
update
2020-05-23 | 18:30h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Youth dies after drinking pesticide in brandy near Perambalur! Police are investigating !!

பெரம்பலூர் அருகே உள்ள நொச்சியம் கிராமத்தை சேர்ந்தவர் மணி. விவசாயி . இவரது மூத்த மகன் சுதாகர் (வயது 33), கார் மோட்டார் போன்ற இயந்திரங்களுக்கு எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்துள்ளார். திருமணமான இவர் மனைவி சிவரஞ்சனியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் மனமுடைந்த சுதாகர் நேற்று மாலை 3 மணியளவில் பிராந்தியில் பூச்சி மருந்து கலந்து குடித்து விட்டார். இதனை அறிந்த அவரது உறவினர் நண்பர்கள் முதலுதவி செய்து பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் சுமார் நேற்று மாலை 6.15 மணியளவில் உயிரிழந்தார். இது குறித்து சுதாகர் தந்தை மணி என்பவர் கொடுத்த புகாரின் பேரில் பெரம்பலூர் காவல் உதவி ஆய்வாளர் பிச்சை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Advertisement

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
30.06.2026 - 19:01:32
Privacy-Data & cookie usage: