பெரம்பலூரில் வாலிபர் வெட்டி படுகொலை: குற்றவாளிகளை அடையாளம் கண்டது போலீஸ்!

schedule
2022-08-04 | 19:16h
update
2022-08-04 | 20:34h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Youth hacked to death in Perambalur: Police identified the culprits! The reason for the conflict!

பெரம்பலூரில் இன்று மாலை, பெரியார் சிலை பின்புறம் உள்ள திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் கோபால் மகன் வினோத் 6 பேர் கொண்ட கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். மற்றொரு வாலிபர் கார்த்திக் மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து நடத்திய முதல் கட்ட விசாரணையில், பெரம்பலூர் துறைமங்கலத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்தவர் வின்சன். பெரம்பலூரில் உள்ள தனியார் கல்லூரியில் பயின்று வருகிறார். வின்சனுக்கும், பெரம்பலூர் வெங்கடேசபுரத்தைச் சேர்ந்த கண்ணன் மகன் பிரித்திகை வாசனுக்கும் முன் விரோதம் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், பெரம்பலூர் ரோவர் வளைவு அருகே பிருத்திகை வாசன் தலைமையில் பெரம்பலூர் கம்பன் நகரைச் சேர்ந்த சங்கர் மகன் பூவரசன், பாரதிதாசன் நகரைச் சேர்ந்த சத்தியமூர்த்தி, நவீன், மணி, பிரத்தீஷ் ஆகியோர் நேற்று வின்சனை மிரட்டியுள்ளனர்.

Advertisement

தொடர்ந்து, பிரித்திகை வாசன், பிரத்தீஸ், மணி ஆகியோர் இன்று வின்சனை தாக்க முயற்சித்தனராம். அங்கிருந்து தப்பியோடிய வின்சன் அவரது நண்பர்களான திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த சரவணன், வினோத், கார்த்திக் உள்பட 10 பேருடன் சேர்ந்து, பிரத்தீஸை தூக்கிச் சென்று எளம்பலூர் அருகே தாக்கியுள்ளனர். பின்னர், அங்கிருந்து தப்பிவந்த பிரத்தீஸ் தனது நண்பர்களிடம் கூறியுள்ளார்.

இதையடுத்து, மது போதையில் 6 பேர் கொண்ட கும்பல் பெரம்பலூர் டோமினிக் பள்ளி அருகே இன்று மாலை நின்றுக் கொண்டிருந்த வினோத் (28), பாரதியார் தெருவைச் சேர்ந்த துரை மகன் கார்த்தி (25) ஆகியோரை கத்தியால் குத்திவிட்டு தப்பி சென்றது தெரிய வந்தது.

பெரம்பலூர் போலீஸார் தலைமறைவான 6 பேரையும் தேடி வருகின்றனர். நகரின் முக்கிய பகுதியில் பட்டப் பகலில் நடந்த

இச்சம்பவம் அப்குதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும், இளைஞர்களின் போக்கு நாளுக்கு நாள் மோசமாகி வருவதற்கு இச்சம்பவம் ஓர் உதாராணம்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
03.09.2026 - 10:05:52
Privacy-Data & cookie usage: