பெண்ணை தூக்கி சென்று கற்பழித்த இளைஞருக்கு 10 ஆண்டு சிறை ; பெரம்பலூர் நீதிமன்றம் தீர்ப்பு!

schedule
2019-11-08 | 15:58h
update
2019-11-09 | 05:47h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Youth sentenced to 10 years in jail for raping woman Perambalur ; court verdict!

பெரம்பலூர் அருகே இளம்பெண்ணை கற்பழித்த இளைஞருக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து பெரம்பலூர் மாவட்ட மகளிர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது.

Advertisement

பெரம்பலூர் மாவட்டம், வாலிகண்டபுரம், அப்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்த மணி என்பவரின் மகன் மணிகண்டன்(31). டீக்கடைத் தொழிலாளியான இவர், பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 31 வயது இளம்பெண் ஒருவரை கடந்த 4.9.2017 அன்று நெய்குப்பை பகுதியிலுள்ள கரும்புக்காட்டுக்குள் தூக்கிச் சென்று கற்பழித்துவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் மங்கலமேடு காவல்நிலையத்தில் புகார் செய்தார். போலீஸார் கற்பழிப்பு வழக்கில் மணிகண்டனை கைது செய்து சிறையில் அடைத்தனர். மணிகண்டன் பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார். இந்த வழக்கின் விசாரணை பெரம்பலூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

வழக்கை விசாரித்த மகளிர் நீதிமன்ற நீதிபதி மலர்விழி இன்று வழங்கிய தீர்ப்பில், இளம்பெண்ணை கற்பழித்த குற்றத்துக்காக மணிகண்டனுக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார். இதையடுத்து மணிகண்டன் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
08.04.2026 - 00:27:33
Privacy-Data & cookie usage: