சமூக நலனுக்கு தொண்டாற்றிய இளைஞர்கள், தொண்டு நிறுவனங்களுக்கு தேசிய இளைஞர் விருது

schedule
2016-08-17 | 16:48h
update
2026-06-28 | 03:36h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

youth service in social welfare, charitable organizations can apply for the National Youth Award

சமூக நலனில் சிறப்பாக தொண்டாற்றிய இளைஞர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் தேசிய இளைஞர் விருது தகுதியானர்வர்கள் விண்ணப்பிக்கலாம்

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளதாவது:

ஒவ்வொரு வருடமும் ஜனவரி திங்கள் 12-ம் நாள் சுவாமி விவேகானந்தர் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெறும் தேசிய அளவிலான இளைஞர் விழாவில் மத்திய அரசால் சமூக நலன் மற்றும் தேசிய வளர்சிசிக்கான பணிகளை சிறப்பாக செய்து வரும் இளைஞர்களுக்கும் (15வயது முதல் 29 வயது வரையிலான) மற்றும் தன்னார்வ தொண்டு அமைப்புகளுக்கும் தேசிய இளைஞர் விருது வழங்கப்பட்டு வருகிறது.

2015-2016-ஆம் நிதியாண்டில் சமூக நலனில் சிறப்பாக தொண்டாற்றிய இளைஞர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் 01.04.2015 முதல் 31.03.2016 வரையிலான காலத்திற்கு செய்த இளைஞா; நலப் பணிகளுக்காக விருதுகள் வழங்கப்பட உள்ளது.

இளைஞர் (தனி நபர்) பிரிவில் 2015-2016-ஆம் நிதியாண்டில் சமூக நலனில் சிறப்பாக தொண்டாற்றிய இளைஞர்கள் 15-லிருந்து 29 வயதுக்குள் இருக்க வேண்டும். தன்னார்வ அடிப்படையில் நிதி ஆதாயம் பெறப்படாமல் தொண்டு செய்திருக்க வேண்டும். இதற்குமுன் விருது பெற்றவர்கள் இந்த ஆண்டுக்கான விருது பெற விண்ணப்பிக்க இயலாது.

Advertisement

மத்திய, மாநில பல்கலைக் கழகங்கள் மற்றும் இதர அரசு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள், இந்த விருது பெற விண்ணப்பிக்க இயலாது. இதற்கான பரிசு தொகை ரூ.40,000- ரொக்கம், பதக்கம் 25 நபர்களுக்கு வழங்கப்பட உள்ளது.

தன்னார்வ தொண்டு நிறுவனம் பிரிவில் சங்க பதிவு சட்டத்தின்படி தொண்டு நிறுவனம் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். நிர்வாக குழுவின் அதிகாரங்கள் அமைப்பு விதிகளில் குறிப்பிட்டிருக்க வேண்டும்.

எந்தவித லாப நோக்கத்துடனும் தொண்டு பணிகள் ஆற்றியிருக்க கூடாது. குறிப்பிட்ட சாதி, சமய அடிப்படையில் தொண்டாற்றிய நிறுவனங்கள் இவ்விருதுக்கு விண்ணப்பிக்க இயலாது. இதற்கு முன் இவ்விருது பெற்ற தொண்டு நிறுவனங்கள் இதற்கு விண்ணப்பிக்க இயலாது. சமுதாய நலப்பணிகளில் ஈடுபட்டு தொண்டாற்றிய புகைப்படம் மற்றும் செய்திக் குறிப்பு மற்றும் இதர ஆவணங்களுடன் சான்றொப்பம் இட்ட ஆதாரங்கள் இணைக்கப்பட வேண்டும்.

தேசிய இளைஞர் விருது பெறுவதற்கான விண்ணப்பப் படிவங்களை மாவட்ட விளையாட்டு அலுவலர் அலுவலகத்தில் பெற்று பூர்த்தி செய்து 3 நகல்களுடன் கருத்துருக்களை பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் அலுவலகத்தில் 25.08.2016-க்குள் கொடுக்கப்பட வேண்டும்.

இதன் தொடர்பான விவரங்கள் மற்றும் விண்ணப்பங்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணைய தளமான www.sdat.tn.gov.in , மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தகுதியான விண்ணப்பங்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையிலான குழு பரிசீலித்து மாநில அளவிலான குழுவுக்கு பரிந்துரைக்கும். அவ்வாறு மாவட்டக் குழுவினரால் பரிந்துரைக்கப்பட்ட கருத்துருக்கள் மாநில குழுவில் வைக்கப்பட்டு, அக்குழுவினரால் பரிந்துரைக்கும் கருத்துருக்கள் மைய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும்.

எனவே 2015-2016-ஆம் நிதியாண்டில் சமூக நலனில் சிறப்பாக தொண்டாற்றிய இளைஞர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் விண்ணப்பப் படிவங்களை மாவட்ட விளையாட்டு அலுவலர் அலுவலகத்தில் பெற்று பூர்த்தி செய்து விண்ணப்பத்தினை பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் அலுவலகத்தில் 25.08.2016-க்குள் கொடுக்கப்பட வேண்டும், என தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
28.06.2026 - 03:36:48
Privacy-Data & cookie usage: