பெரம்பலூர் நாயுடு பேரவை சார்பில் யுகாதி பெருவிழா

schedule
2018-03-26 | 06:50h
update
2026-07-05 | 04:58h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Yugathai is celebrated on behalf of Perambalur Naidu

பெரம்பலூர் மாவட்ட நாயுடு பேரவை சார்பில் தெலுங்கு மொழி புத்தாண்டான யுகாதியை முன்னிட்டு விழா நடைபெற்றது. மாநில இணைச் செயலாளரும், மாவட்ட தலைவருமான கே. செல்வராஜ் தலைமையில் நேற்று நடைபெற்றது.

Advertisement

ரோவர் கல்வி நிறுவனங்களின் தாளாளரும், மேலாண் இயக்குநருமான கே.வரதராஜன் முன்னிலை வகித்தார். மகாலட்சுமி வரதராஜன் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். தமிழ்நாடு நாயுடு பேரவை நிறுவனத் தலைவர் ஜி.காமாட்சி நாயுடு சிறப்புரை ஆற்றினார்.

மாவட்ட பொதுச் செயலாளர் பிரகாஷ், மாவட்ட பொருளாளர் செந்தில்குமார், மாவட்ட துணைத் தலைவர்கள் தேவராஜ், சூர்யகுமார், மாவட்ட மற்றும் மண்டல செயலாளர் ஜெய்சங்கர், மாநில மக்கள் செய்தித் தொடர்பாளர் எசனை – கீழக்கரை சஞ்சீவிகுமார் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

விழாவில், மகளிரணி பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி ஊக்கப்படுத்தினர். முன்னதாக பெரம்பலூர் பாலக்கரையில் இருந்து எளம்பலூர் சாலை வரை மேளதாளத்துடன் ஊர்வலமாக வந்தனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
05.07.2026 - 04:58:47
Privacy-Data & cookie usage: