காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி குடியரசு தலைவருக்கு திமுக சார்பில் 25 ஆயிரம் கடிதம்

schedule
2018-05-11 | 15:13h
update
2026-04-18 | 13:09h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

25 thousand letter of the DMK to the President demanding the formation of Cauvery Management Board

திருப்பூர் : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி குடியரசு தலைவருக்கு வெள்ளிக்கிழமை 25 ஆயிரம் கடிதங்கள் திருப்பூர் தலைமை தபால் நிலையத்திலிருந்து அனுப்பப்பட்டது.

Advertisement

திருப்பூர் மாவட்ட திமுக வடக்கு மாவட்ட செயலாளர் செல்வராஜ் தலைமையில் காவிரி மேலான்மை வாரியம் அமைக்க கோரி மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களிடம் கடந்த நாட்களில் கையெழுத்துகள் பெறப்பட்டது.

இதையடுத்து முதற்கட்டமாக 25 ஆயிரம் கடிதங்களை திருப்பூர் தலைமை தபால் நிலையத்தில் இருந்து குடியரசு தலைவருக்கு அனுப்பப்பட்டது.

மீண்டும் சிறிது நாட்களில் மீதமுள்ள 25 ஆயிரம் கடிதங்கள் அனுப்பப்படும் என்றனர். இந்த நிகழ்வில் மாநகர பொருப்பாளர் மேங்கோ பழனிச்சாமி, தொ.மு.ச மாநில துணை தலைவர் கோவிந்தசாமி, துணை செயலாளர் டி.கே.டி நாகராஜ், மகளிர் அணி மாநில துணை செயலாளர் மலர் மரகதம், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags: Tiruppur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
18.04.2026 - 13:09:17
Privacy-Data & cookie usage: