திருமண நாள் கொண்டாட இருந்த வக்கீல், மனைவி குழந்தையுடன் விபத்தில் பலி!

schedule
2022-06-14 | 19:38h
update
2022-06-14 | 19:48h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Lawyer who was to celebrate wedding day, wife killed in accident with child!

பெரம்பலூர் காமாராஜர் வளைவு அருகே உள்ள மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் வக்கீல் மணிகண்டன் (35). இவர் திண்டுக்கல் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வந்துள்ளார்.

கோவைக்கு உறவினர் திருமணத்திற்கு சென்ற மணிகண்டன், திருப்பூர் மாவட்டம், தாராபுரம் – ஒட்டன்சத்திரம் வழியாக திண்டுக்கல் நோக்கி காரில் அவரது மனைவி போதுமணி (28), மற்றும் 4 மாத ஆண்குழந்தை, மற்றும் 3 வயது பெண் குழந்தை ருத்ரா உடன் வந்து கொண்டிருந்தார். தாராபுரம் சாலக்கடை அருகே நள்ளிரவில் வந்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புக் கட்டையில் மோதி 3 முறை உருண்டது.

Advertisement

இதில், போதுமணி, 4 வயது ஆண் குழந்தை, சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மணிகண்டன், அவரது மகள் ருத்ரா படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். இது குறித்து தகவல் அறிந்த மூலனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவர்களை மீட்டு கரூர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேல் சிகிச்சைக்காக திருச்சி தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மணிகண்டன் சிகிச்சையின் போது உயிரிழந்தார். ருத்ரா கால் முறிவு ஏற்பட்டதில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

விபத்தில் பலியான மணிகண்டன், அவரது மனைவி போதுமணி, 4 மாத குழந்தையை உடல்கள் பெரம்பலூர் எடுத்துச் செல்லப்பட்டு, ஒரே தகனமேடையில் எரியூட்டினர். திருமண நாளான இன்று ஒரே நேரத்தில் வக்கீல் குடும்பத்தினருடன் இறந்த சம்பவம் உறவினர்களையும் அப்பகுதி மக்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.

கார், உள்ளிட்ட வாகனங்களை இயக்குபவர்கள், அவசரப்படாமலும், உரிய ஓய்வு எடுத்து பயணிப்பதே சிறந்தது. அல்லது தொழில் முறை ஓட்டுனர்களை வைத்து கொள்வதே வருமுன் காப்பதாகும். விலை மதிப்பற்ற உயிர்கள் விபத்துகளில் பலியாவது பரிதாபத்திற்குரியது. பொறுமை கடலினும் பெரிது!

Tags: Tamil Nadu, Tiruppur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
16.04.2026 - 02:15:54
Privacy-Data & cookie usage: