மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென் மாவட்ட மக்களுக்கு பிளஸ் மேக்ஸ் நிறுவனர் டத்தோ பிரகதீஸ்குமார் சார்பில் ரூ.3 லட்சம் மதிப்பில் நிவாரணப் பொருட்கள்!

schedule
2023-12-21 | 16:53h
update
2023-12-21 | 16:53h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Rs. 3 lakh worth of relief goods on behalf of Plus Max founder DATO S PRAKADEESH KUMAR for the people of southern district affected by rain and flood!

பெரம்பலூர் மாவட்டம், பூலாம்பாடியை சேர்ந்த பன்னாட்டு தொழிலதிபர் டத்தோ பிரகதீஸ்குமார் சார்பில் ரூ3லட்ச ரூபாய் மதிப்பிலான நிவாரணப்பொருட்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென்மாவட்ட மக்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

தமிழகத்தின் தென்மாவட்டங்ளான தூத்துக்குடி,நெல்லை ஆகிய மாவட்டங்கள் மழைவெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் இயல்பு வாழ்க்கையை இழந்து பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

Advertisement

அரசுசார்பில் மக்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு நிவாரணப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுவருகிறது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு பல்வேறு தரப்பினரும் நிவாரணப்பொருட்களை அனுப்பிவருகின்றனர்.

அதன் ஒருபகுதியாக பெரம்பலூர் மாவட்டம் பூலாம்பாடியைச் சேர்ந்த டத்தோ பிரகதீஸ்குமார் சார்பில் ரூ3லட்ச ரூபாய் மதிப்பிலான நிவாரணப்பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. அரிசி ,பருப்பு, மளிகை பொருட்கள், பாய், போர்வை, பிரட், வாட்டர் பாட்டில் போன்ற நிவாரணப்பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.

இந்த பொருட்கள் தூத்துக்குடி நெல்லை மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதே போல் சென்னை புயல் வெள்ளாத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு டத்தோபிரகதீஸ்குமார் சார்பில் ரூ2 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Dato S Prakadeesh Kumar, Perambalur, Plus Max Company Social Service
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
28.06.2026 - 00:51:01
Privacy-Data & cookie usage: