95.72 per cent students in Plus 2 exam in Namakkal district: 5th in the state level: 86 schools have passed 100 percent

நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வு எழுதியவர்களில் 95.72 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதத்தில் மாநில அளவில் நாமக்கல் மாவட்டம் 5ம் இடம் பெற்றுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த மாதம் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத்தேர்வில் 200 அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் தேர்வு எழுதினார்கள். தேர்வில் 13 ஆயிரத்து 25 மாணவர்களும், 13 ஆயிரத்து 318 மாணவிகளும் என மொத்தம் 26 ஆயிரத்து 343 பேர் தேர்வு எழுதினார்கள்.

இவர்களில் மாணவர்கள் 12 ஆயிரத்து 312 பேரும், மாணவிகள் 12 ஆயிரத்து 903 பேரும் என மொத்தம் 25 ஆயிரத்து 215 பேர் தேர்ச்சி பெற்றனர். மாணவர்களின் தேர்ச்சி சதவீம் 94.53, மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் 96.88. மொத்த தேர்ச்சி சதவீதம் 95.72. இது மாநில அளவில் அதிகம் தேர்ச்சிபெற்ற மாவட்டங்களில் 5வது இடத்தைப் பெற்றுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் 87 அரசுப்பள்ளிகளைச் சேர்ந்த 9619 மாணவ மாணவிகள் பிளஸ் 2 தேர்வு எழுதினார்கள். இவர்களில் 8739 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதவர்களின் தேர்ச்சி சதவீதம் 90.85 ஆகும். மாவட்டத்தில் கடந்த ஆண்டு 58 பள்ளிகள் பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றன.

இந்த ஆண்டு 86 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த 2017ம் ஆண்டு மொத்த தேர்ச்சி சதவீதம் 96.4 ஆக இருந்து 5வது இடத்தைப்பெற்றது. இந்த ஆண்டு மொத்த தேர்ச்சி 0.68 சதவீதம் குறைந்தாலும் மாநில அளவில் கடந்த ஆண்டு பெற்ற 5வது இடத்தை நாமக்கல் மாவட்டம் தக்க வைத்துள்ளது.

Tags:

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!