Announcement of District Level Sports Competitions for Perambalur District Government Workers

பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு அலுவலர் இராமசுப்பிரமணியராஜா விடுத்துள்ள அறிவிப்பு:

2017-2018-ஆம் ஆண்டிற்கான அரசுப் பணியாளர்களுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் மார்ச்.23 அன்று பெரம்பலூர் மாவட்ட பாரத ரத்னா புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் விளையாட்டு வளாகத்தில் காலை 8.00 மணியளவில் கீழ்காணும் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளது.

தடகளம் விளையாட்டில் 100மீ, 200மீ, 800மீ, 1500 மீ, ஆகிய ஓட்டப் போட்டிகளும், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், 4 x100 மீ தொடர் ஓட்டம் ஆகிய விளையாட்டுப் போட்டிகள் ஆண்களுக்கும், பெண்களுக்கு 100மீ, 200மீ, 400மீ, 800 மீ, ஆகிய ஓட்டப் போட்டிகளும் உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், 4 x 100 மீ தொடர் ஓட்டம் ஆகிய விளையாட்டுப் போட்டிகளும்; இறகுப்பந்து, கூடைப்பந்து, டென்னிஸ், கபடி, மேஜைப்பந்து, கையுந்துப்பந்து ஆகிய விளையாட்டுப் போட்டிகள் இருபாலருக்கும், கால்பந்து விளையாட்டுப் போட்டி ஆண்களுக்கு மட்டும் நடைபெற உள்ளது.

மேற்படி போட்டிகளில் அரசுத் துறைகளில் முழு நேரப் பணிபுரியும் அரசு அலுவலர்கள் மற்றும் பயிற்றுநர்கள், காவல் துறையில் பணியாற்றும் அமைச்சுப் பணியாளர்கள், விளையாட்டு அலுவலர்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் உடற்கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்கள் ஆகியோர் பங்கேற்க தகுதியுடையவராவர்.

காவல் துறை, தீயணைப்புத் துறையில் பணியாற்றும் சீருடைப் பணியாளர்கள், நகராட்சிப் பணியாளர்கள், மின்சார வாரியப் பணியாளர்கள், தன்னாட்சி அலுவலகப் பணியாளர்கள், பொதுத் துறை நிறுவனப் பணியாளர்கள், ஆறு மாதத்திற்குள் அரசுப் பணியில் சேர்ந்த அரசுப் பணியாளர்கள்,அரசு அலுவலகங்களில் தற்காலிக மற்றும் தினக்கூலி அடிப்படையில் பணியாற்றும் பணியளர்கள் பங்கேற்க இயலாது.

போட்டிகளில் பங்கேற்க விரும்பும் அலுவலர்கள் மற்றும் பணியளர்கள் அசாணை எண் 93, இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை நாள் 27.11.2013-ன் படி போட்டி நாளன்று ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம்.

அரசாணையின்படி மாவட்ட மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்பவர்களுக்குரிய தினப்படி மற்றும் பயணப்படி ஆகியவற்றை சம்மந்தப்பட்ட அரசுத்துறைகள் ஏற்க வேண்டும்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் வழங்க இயலாது. அணிவகுப்பு மரியாதையில் அதிக அளவில் கலந்து கொள்ளும் துறைக்கு கோப்பையும். விளையாட்டுப் போட்டிகளில் அதிக அளவில் பங்கு கொள்ள உள்ள துறையினருக்கு கோப்பையும், விளையாட்டுப் போட்டிகளில் அதிக புள்ளிகளை குவிக்கும் துறையினருக்கு கேடயமும், தனிநபர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்படும்.

விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிப் பெறுவதற்கு ஏதுவாக மாவட்ட விளையாட்டு அரங்கில் பயிற்சி மேற்கொள்ளுமாறு பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

மாவட்ட ஆட்சியரின் அறிவுரையின்படி தங்கள் துறையைச் சார்ந்த பணியாளா;களை பயிற்சி மேற்கொள்ளவும், விளையாட்டுப் போட்டிகளில் பெருமளவில் பங்கு பெறவும் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மாவட்ட அளவிலான போட்டிகளில் முதலிடம் பெறுபவர்கள் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்ளலாம். மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்பவர்களுக்கு விளையாட்டு சீருடை வழங்கப்படும்.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு துறை அலுவலகங்களில் பணிபுரியும் போட்டிகளில் கலந்துகொள்ள விரும்பும் அரசு ஊழியர்கள் தங்கள் துறை அலுவலகத் தலைவரிடம் உரிய அனுமதியுடள் கடிதம் பெற்று போட்டிகள் நடைபெறும் நாளான 23.03.2018 அன்று காலை 8.00 மணிக்கு பெரம்பலூர் மாவட்ட பாரத ரத்னா புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் விளையாட்டு வளாகத்திற்கு வருகை தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றது, என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!