MLA R. Tamilselvan asked the legislature to set up medical college in Perambalur District

தமிழக சட்ட மன்றப் பேரவையில் 2018-19 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையின் மீதான பொது விவாத நிகழ்வில் நேற்று பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் இரா.தமிழ்ச்சசெல்வன் அவர;கள் பெரம்பலூர் மாவட்டத்திற்கு விரைவில் மருத்துவக்கல்லூரி அமைத்துத் தர வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்துப் பேசினார்.

பெரம்பலூர் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான அரசு மருத்துவக்கல்லூரி அமைக்க அரசாணை வெளியிடப்பட்டு 10 ஆண்டுகள் ஆகின்றது, எனவே, விரைவில் அரசு மருத்துவக் கல்லூரியினை பெரம்பலூரில் அமைந்திட ஆவணம் செய்து தர வேண்டும்.

பெரம்பலூரில் மாவட்ட விவாசாயப் பெருங்குடி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான வேப்பந்தட்டை வட்டம் மலையாளப்பட்டி அருகே சின்னமுட்லு தடுப்பணைக்கு பதிலாக புதிய நீர்த்தேக்கம் அமைக்க புதிய அரசாணை வெளியிட்டு ஆய்வுப்பணி மேற்கொள்வதற்கு இந்த திட்டத்தினை விரைந்து நிறை வேற்றித் தர வேண்டும். பெரம்பலூர் நகராட்சி மாவட்டத்தின் மையப்பகுதியாக விளங்குவதால் இங்கு உள்ளூர் திட்டக் குழுமம் அமைத்துத்தர மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. எனவே, உள்ளூர் திட்டக்குழுமம் விரைவில் அமைத்துத்தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன் என்றும்,

பெரம்பலூர் மாவட்டமாக உருவாக்கப்பட்டு 22 ஆண்டுகள் ஆகின்றது எனவே, புதிய மாவட்ட பத்திரப்பதிவு அலுவலகம் அமைத்துத்தர வேண்டும். பெரம்பலூர் மாவட்டத்தில் புவியியல் மற்றும் சுரங்கத்துறையில் உதவி இயக்குநர் பணியிடம் உருவாக்கப்பட்டும் காலியாக உள்ளது, எனவே, அப்பணியிடத்தை விரைந்து நிரப்பித்தந்திட வேண்டும். பெரம்பலூர் மற்றும் குன்னம் சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் பழுதடைந்துள்ள சுமார் 200 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலைகனை புதுப்பிக்க ஆவணம் செய்ய வேண்டும்.

குறிப்பாக பெரம்பலூரில் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளியை உருவாக்கி தந்திட வேண்டும். பெரம்பலூர் சத்திரமனை மற்றும் ஆலத்தூர் ஒன்றியம் டி.களத்தூர் ஆகிய பகுதிகளில் உள்ள உயர்நிலைப்பள்ளிகளை மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தி தந்திட வேண்டும்.

ஆலத்தூர் வட்டம் தேனூர் ஊராட்சியில் புதிய ஆரம்ப சுகாதார நிலையத்தை அமைத்து தந்திடவும், பெரம்பலூர் நகரத்தில் உள்ள காவல் நிலையங்கள் நான்கு பிரிவுகளாக தரம்பிரிக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர் மாவட்டக் காவல் நிலையத்தை தரம் உயர்த்தப்பட்ட காவல் நிலையமாக உருவாக்கித் தந்திட வேண்டும் என்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சரையும், சம்மந்தப்பட்ட துறைகளைச் சார்ந்த அமைச்சர் பெருமக்களையும் கேட்டுக்கொள்வதாக பேசினார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!