Namakkal district Erumapatti Jallikattu Competition 260 Bulls participation; 5 people were injured

நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டியில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் தலைமை வகித்தார். மாவட்ட போலீஸ் எஸ்பிஅருளரசு, நாமக்கல் எம்பி சுந்தரம், எம்எல்ஏக்கள் பாஸ்கர், சந்திரசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி, சமூக நலன் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் டாக்டர் சரோஜா ஜல்லிக்கட்டு உறுதிமொழியை வாசித்தனர். இனைத்து மாடு பிடி வீரர்களும் பின்தொடர்ந்து வாசித்து ஏற்றுக் கொண்டனர். அதனைத்தொடர்ந்து அமைச்சர்கள் ஜல்லிக்கட்டு போட்டியை துவக்கி வைத்தனர்.

இங்கு நாமக்கல் மாவட்டம் மட்டுமின்றி சேலம், திருச்சி, பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சை, மதுரை மாவட்டங்களில் இருந்தும் ஜல்லிக் கட்டு காளைகள் அழைத்து வரப்பட்டன. போட்டியில் 260 காளைகளும், 165 மாடிபிடி வீரர்களும் பங்கேற்றனர். தொடர்ந்து மாட்டு உரிமையாளர்களின் பெயருடன் சேர்த்து படித்து வாடிவாசல் வழியாக காளைகள் திறந்துவிடப்பட்டன, அப்போது சீறிப்பாய்ந்து வந்த காளைகளை அங்கிருந்த மாடுபிடி வீரர்கள் அடக்க முற்பட்டனர்.

அப்போது காளைகள் முட்டியதில் 5 பேர் காயமடைந்தனர். போட்டியின்போது காளைகள் முட்டிக் காயமடைந்தவர்களுக்கு அங்கிருந்த மருத்துவக் குழு மூலம் முதலுதவி அளிக்கப்பட்டது. காளைகளை அடக்கிய வீரர்களுக்கு மாட்டின் உரிமையாளர்கள் சோபா, கட்டில், மிக்சி, குக்கர், கட்டில், தங்கக்காசு, வெள்ளி அரைஞான் கயிறு, குடம், சேர் போன்ற பல்வேறு பரிசுகளை வழங்கினர்.

வீரர்கள் பிடியில் சிக்காமல் லாவகமாக சென்ற காளைகளுக்கு விழாக்குழுவினர் சார்பில் அதன் உரிமையாளர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. முன்னதாக போட்டி நடைபெறும் இடம் முழுவதும் மரத்தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. பார்வையாளர்கள் தடுப்பு வெளியே நிறுத்தப்பட்டனர். ஜல்லிக்கட்டுக் காளைகள் வெளியே வரும் வாடி வாசல் முதல் சில அடி தூரம் வரை தேங்காய் நார் கொட்டி பரப்பி விடப்பட்டிருந்ததது.

காளைகள் மருத்துவ பரிசோதனைக்கு பின்னரே போட்டி நடைபெறும் இடத்திற்குள் அனுமதிக்கப்பட்டன. காலை 9.30 மணிக்கு ஜல்லிக்கட்டுப் போட்டிகள் துவங்கியது, பகல் 1.30 மணி வரை காளைகள் போட்டியில் விடப்பட்டன. 249 மாடுபிடி வீரர்கள் 2 குழுக்களாக பிரிக்கப்பட்டு போட்டி நடைபெறும் இடத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.
போட்டியின்போது காளைகள் முட்டிக் காயமடைந்தவர்களுக்கு அங்கிருந்த மருத்துவக் குழு மூலம் முதலுதவி அளிக்கப்பட்டது. மேல்சிகிச்சை தேவைப்படுவோர் 108 ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

Tags:

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!