The opening ceremony of the Income Tax Department Service Center in Perambalur

பெரம்பலூர் வருமான வரித்துறை அலுவலகத்தில் பெரம்பலூர் அரியலூர் மாவட்டத்திற்கான சேவை மைய திறப்பு விழா இன்று நடைபெற்றது.

விழாவில் திருச்சி வருமான வரித்துறை தலைமை ஆணையர் பிரமோத் நான்ங்கியா குத்துவிளக்கேற்றி வைத்து மைய பணிகளை தொடங்கி வைத்தார், பின்னர் அவர் பேசியதாவது: பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் கடந்த ஆண்டு 12 கோடி ரூபாய் வருமான வரியாக மக்கள் செலுத்திவுள்ளனர்.

வருமான வரி கட்டுவோரின் எண்ணிக்கை 12 ஆயிரமாக உயர்ந்துள்ளது. இந்தியாவில் வருங்காலத்தில் வருமான வரி வசூல் 10 லட்சம் கோடியை எட்டுவது இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தற்போது 6 கோடி நபர்கள் வருமான வரி செலுத்துவோராக உள்ளனர். வருமான வரித்துறையின் செயல்பாடுகள் வெளிப்படை தன்மையோடு உள்ளது. நவம்பர் 2016ல் செயல்படுத்தப்பட்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் தங்கள் வங்கி கணக்குகளில் அதிகமாக பணம் செலுத்தியவர்கள் தற்போது தண்டனை தவிர்த்து கொள்வதற்காக வருமான வரி படிவத்தை தாக்கல் செய்து வருகின்றனர்.

இந்த சேவை மையத்தில் கொடுக்கப்படும் மனுக்களுக்கு ரசீது வழங்கப்பட்டு 30 நாட்களுக்குள் அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கனவே 75 சதவீத மனுக்கள் தீர்வு காணப்பட்டுள்ளது. எப்பொழுதும் போல இந்தாண்டும் மார்ச் 31ம்தேதிக்குள் வருமான வரி தாக்கல் செய்ய கடைசி நாளாகும் என்றார்.

திருச்சி வருமான வரித்துறை முதன்மை ஆணையர் மீனா முன்னிலை வகித்து பேசியதாவது:

பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் கார்ப்ரேட் அல்லா தோரில் 10 லட்சத்திற்கு கீழ் வருமானம் உள்ளவர்கள் வருமான வரி தாக்கல் செய்கின்றனர். கார்ப்ரேட் நிறுவனங்கள் 15 லட்சத்திற்கு கீழ் வருமானம் உள்ளவர்கள் வருமான வரி தாக்கல் செய்கின்றனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் 7 ஆயிரத்து 921 பேர் வரி செலுத்துகின்றனர். இதே போல் அரியலூர் மாவட்டத்தில் 7 ஆயிரத்து 3 பேர் வரி செலுத்துகின்றனர். திருச்சி மண்டலத்தில் 13 வருமான வரித்துறை அலுவலகங்கள் உள்ளது. பெரம்பலூரில் 12 ஆவதாக வருமான வரி சேவை மையம் திறக்கப்பட்டுள்ளது.

வரும் 26ம்தேதி திருவாரூரில் 13 வது வருமான வரிசேவை மையம் திறக்கப்படவுள்ளது. இச்சேவை மையத்தில் கொடுக்கப்படும் மனுக்கள் பதிவு செய்யப்பட்டு எக்காலத்திலும் மனுக்கள் மீதான நடவடிக்கையின் தன்மையை கண்டறியலாம்.

வருமானவரித்துறையில் வரி செலுத்துவோருக்கு மேம்படுத்தப்பட்ட சேவையினை வழங்குவதற்காகவே இம்மையங்கள் திறக்கப்படுகின்றன. இம்மையங்களை பயன்படுத்தி சேவைகளை பெற்றுக்கொள்ளலாம் என்றார்.

திருச்சி வருமான வரித்துறை கூடுதல் ஆணையர் ஆல்பர்ட் மனோகர் வரவேற்றார். இந்த விழாவில் திருச்சி வருமானவரி இணைஆணையர் நவீன்குமார் வருமானவரி அதிகாரி அன்பழகன் மற்றும் திருச்சிராப்பள்ளி அதிகாரிகள், தணிக்கையாளர்கள், வணிகர்கள், பொதுமக்கள், கலந்து கொண்டனர்.

பெரம்பலூர் வருமானவரித்துறை அதிகாரி லலிதா நன்றி கூறினார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!