பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே குழந்தை திருமணத்தில் ஈடுபட்ட மணமகன் உட்பட 5 பேர் மீது
போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் அருகே உள்ள அய்லூர் கிராமத்தை சேர்ந்த துரைராஜ்ரூசந்திரா தம்பதியினரின் மகன் ஆனந்தராஜ்(33) என்பவருக்கும்,
அரியலூர் மாவட்டம் கீழக்கொளத்தூர் கிராமத்தை சேர்ந்த சின்னதுரை – அம்பிகா தம்பதியினரின் மகள் அபிராமி(14) எனபவருக்கும் கடந்த மே மாதம் 29ந்தேதி சமயபுரத்தில் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றுள்ளது.
இதுபற்றி தகவலறிந்த அய்யலூர் கிராம நிர்வாக அலுவலர் ஞானப்பிரகாசம்(38), மருவத்தூர் காவல்
நிலையத்தில் புகார் தெரிவித்த புகாரின் பேரில் வருவாய்த்துறை மற்றும் சமூக நலத்துறை அதிகாரிகளுடன் அய்யலூர் கிராமத்திற்கு விரைந்து சென்று, சிறுமி அபிராமியை மீட்டு அரசு காப்பகத்தில் சேர்த்தனர்.
மேலும் குழந்தை திருமணத்தில் ஈடுபட்ட மணமகன் ஆனந்தராஜ் அவரது பெற்றோர்களான துரைராஜ், சந்திரா மற்றும் சிறுமி அபிராமியின் பெற்றோர்களான சின்னதுரை, அம்பிகா ஆகிய 5பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.