பெரம்பலூர் நகர அதிமுக சார்பில் அரணாரையில் காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் இளங்கோவனின் உருவபொம்மை எரிக்கப்பட்டது.
பிரதமர் நரேந்திரமோடியும், தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் சந்தித்த நிகழ்வை கொச்சை படுத்தி காங்கிரஸ் மாநில தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் பேசினாராம். இதனை கண்டித்து பெரம்பலூர் நகர அதிமுக சார்பில் அரணாரையில் நேற்று மாலை காங்கிரஸ் மாநில தலைவர் இளங்கோவனின் உருவபொம்மை எரிக்கப்பட்டது.
இதில் அதிமுக நகர செயலாளர் ராமச்சந்திரன், கவுன்சிலர் பேபிகாமராஜ் மற்றும் நகர நிர்வாகிகள் சங்குசரவணன், முகமது இக்பால், பூபதி, சிவக்குமார், ராமகிருஷ்ணன், சுரேஷ், கனகராஜ் மற்றும் பெண்கள், கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.