Award to Chennai Metropolitan Transport Corporation; presented by Union Minister Manohar Lal Khattar to Minister Sivasankar!

டெல்லியில் நடந்த “Urban Mobility India Conference & Expo 2025” மாநாட்டில், சென்னை பொதுப் போக்குவரத்தை மேம்படுத்தியதற்காக, தமிழ்நாடு அரசின் போக்குவரத்து கழகமான, சென்னை மாநகர போக்குவரத்து கழகத்துக்கு “நாட்டிலேயே சிறந்த பொதுப் போக்குவரத்து அமைப்பைக் கொண்ட நகரம்” எனும் விருது வழங்கப்பட்டது. விருதினை இந்திய அரசின் எரிசக்தி மற்றும் வீட்டுவசதி நகர்புற மேம்பாட்டு துறை அமைச்சர் மனோகர் லால் கட்டார், தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கரனிடம் வழங்கினார். மாநகர் போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குநர் டி. பிரபுசங்கர் உடனிருந்தார். தமிழ்நாடு அரசின் முன்னெடுப்புகளான ‘விடியல் பயணம்’, சென்னை மாநகர பள்ளிகளுக்கான பிரத்யேக பேருந்து வசதி, ‘சென்னை ஒன்’ செயலி மற்றும் ஒருங்கிணைந்த டிக்கெட் (NCMC) போன்ற திட்டங்கள், இந்தியாவிற்கே ஒரு முன்மாதிரியாகத் திகழ்கிறது என அமைச்சர் சிவசங்கர் பெருமிதமாக தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!