Equality Pongal celebrations at Perambalur & Kunnam bus depots! Minister Sivashankar distributes new clothes and extends greetings!!

பெரம்பலூர் மற்றும் குன்னம் அரசு போக்குவரத்துக் கழக பனிமனைகளில் திராவிட சமத்துவ பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில், முதல் முறையாக அரசு போக்குவரத்து கழக பணிமனையில் சமத்துவ பொங்கல் வைத்து கொண்டாடப்பட்டது. போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி சிவசங்கர் சீரிய முயற்சியில் பொங்கலுக்கு அனைத்து தொழிலாளர்களுக்கும் யூனியன் பாகுபாடு இல்லாமல், அதிகாரிகளுக்கும், பணியாளர்களுக்கும், தூய்மை பணியாளர்கள், பேருந்து கேன்வாஸர் உள்ளிட்ட அனைவருக்கும் புத்தாடை வழங்கி அமைச்சர் சா.சி.சிவசங்கர் பொங்கல் வாழ்த்து கூறினார்.
பெரம்பலூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன், சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன், போக்குவரத்துக்கழக திருச்சி மண்டல பொது மேலாளர் டி.சதீஸ்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் என்.ராஜேந்திரன், கோட்ட மேலாளர் ராம்குமார், ஒன்றிய செயலாளர்கள் எம்.ராஜ்குமார், தி.மதியழகன், சி.ராஜேந்திரன், டாக்டர் செ.வல்லபன், பெரம்பலூர் கோட்ட துணை மேலாளர் (தொழில்நுட்பம்) புகழேந்தி ராஜ், பெரம்பலூர் கிளை மேலாளர் தண்டாயுதபாணி, நகர்மன்ற துணைத் தலைவர் ஆதவன், தொழிலாளர் சங்க பொறுப்பாளர் கே.கே.குமார் உள்ளிட்ட தொழிற்சங்கத்தினர் நகராட்சி கவுன்சிலர் சித்தார்த், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் டி.ஆர்.சிவசங்கர், மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் ஜி.கே.மூர்த்தி, உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.









kaalaimalar2@gmail.com |
9003770497